Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் ... சிறுவாபுரியில் திருக்கல்யாணம் : மணகோலத்தில் முருகன் தரிசனம் சிறுவாபுரியில் திருக்கல்யாணம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை : ராஜா வீதிகளில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை : ராஜா வீதிகளில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
10:06

தஞ்சாவூர்: தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் 24 கருடசேவை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அதன்படி 84-வது ஆண்டாக இந்த ஆண்டு 24 பெருமாள்கள் கருடசேவை  விழா இன்று நடந்தது.

விழாவின் தொடக்கமாக  காலை 6 மணிக்கு  வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில் களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர். அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர அவரை தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னபெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், கரந்தை யாதவக்கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மபெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுகவெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன்கோவில் தெரு ஜனார்த் தனபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலராஜவீதி ரெங்கநாதபெருமாள், விஜயராமபெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணபெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டனர்.

கருடவாகனத்தில் எழுந்தருளிய அனைத்து பெருமாள்களும் வரிசையாக காலை 7 மணி முதல் 11.30 மணி வரை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்துவிட்டு மீண்டும் கொடிமரத்து மூலையை சென்றடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தன. கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனைபாடியபடி சென்றனர் .அப்போது ராஜ வீதிகளில்  பக்தர்கள் குவிந்து இருந்தனர். நாளை ( 5ம் தேதி) நவநீத சேவையும், 6-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், தமிழ்ச்செல்வி மற்றும் ராமானுஜதர்சன சபையினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar