Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்! ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆனித் ஆனிதிருமஞ்சனம் குறித்து ஆலோசனை கூட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் ஆனித் ஆனிதிருமஞ்சனம் குறித்து ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
12:06

சிதம்பரம்: சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆனிதிருமஞ்சனம் குறித்து அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


21ம் தேதி ஆனித் திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.இதனையொட்டி கோவில் தீட்சிதர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா,  இன்ஸ்பெக்டர் குமார், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி அலுவலர்கள், மின்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தரிசன உற்சவம் பக்தர்கள் பாதிக்காத வகையில் மதியம் 2:00 மணிக்குள் நடத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த பணிகளை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதும், 30 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது. இந்த கூட்டம் வழக்கம் போல் சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்ட கூட்டமாகவே இருந்தது.


தடைக்கு மறுப்பு: கூட்டத்தில் தேரோட்டத்தின் போதும், தரிசனத்தின் போதும் பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கக் கூடாது. இதற்கு ஆர்.டி.ஓ., உத்தரவிட வேண்டும் என தீட்சிதர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஆர்.டி.ஓ., மற்ற பெரிய கோவில்களில் பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க தடை இல்லை. மேலும், பொது இடத்திற்கு வந்த பின்னர் பத்திரிக்கையாளர்கள் படம் எடுப்பதைத் தடுக்க முடியாது என மறுத்து விட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar