Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் ... வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலானை கொண்டாடுவோம்!
எழுத்தின் அளவு:
ரமலானை கொண்டாடுவோம்!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
11:06

முஸ்லிம்கள் அனுசரிக்கின்ற ரம்ஜான் மாதம், ஹிஜிரி ஆண்டின் 9 வது மாதம். இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் இருந்து சூரியன் அஸ்தமித்து கொண்டிருக்கும் வரை கடினமான நோன்பு இருக்க வேண்டும். எதுவும் சாப்பிடக்கூடாது. உமிழ்நீர் கூட விழுங்க கூடாது.

”புனிதக் காபாவை நோக்கி உங்கள் முகத்தை திருப்புங்கள்”.குர்-ஆன் 2,144-45,147-50. இந்த மாதத்தில் 30 நாட்களும் காலையில் வெள்ளை நிறம், இரவு கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இச்சமயத்தில் தான் பகல் நேரம் உஷ்ணமாக இருக்கும், இரவு மத்திபமாக இருக்கும்.இந்தக் காலகட்டத்தில் தான் சூரியன் சுட்டெரிக்கும். சுட்டெரிக்கும் வெயில், நாம் இதுவரைக்கும் செய்த பாவங்களைச் சுட்டெரித்துவிடும். அதே நேரத்தில் உடம்பையும் சுத்திகரித்து விடும்.

’ரம்ஜான்’ என்ற வார்த்தை, ’ரம்ஸ்’ என்ற அரபு வார்த்தையிலிருந்து பிறந்தது. இதற்கு பொருள் ’எரி’, ’எரித்துவிடு’ என்பதாகும். ஒரு மாதம் (29 இரவுகள்) விடாமல் கடுமையான நோன்பு வைப்பதால், அதுவரைக்கும் செய்த பாவங்கள் அனைத்தும் எரிந்து போகும், உடல்நிலை சுத்தமாகிச் சுகமாகிவிடும் என்பர். இது விஞ்ஞான ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சரியே. முஸ்லிம்கள் அல்லாதவர்களும், வாரத்தில் ஓரிரு நாட்கள் உண்ணாமல் இருப்பர். இதை நாம், ’விரதம்(உண்ணாநிலை)’ என்போம். ஒவ்வொருவரும் வாரத்தில் ஓரிரு நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்துவிட்டால் உடலுக்கு நல்லது. ’இஸ்லாம்’ என்பது ஒரு மதமல்ல. அது இறைவனை அடைவதற்கான மார்க்கம் என்றே பொருள்படும். இதைத்தவிர, ’அமைதி’ என்றும் ’ஒருமைப்பாடு’ என்றும் பொருள் கூறுவர்.

ஐந்து கொள்கை : இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஐந்து சிறப்பான கொள்கைகள் உண்டு. அவை ஐந்து துாண்கள் என்று சொல்லப்படும். அவை:1. கலிமா - அல்லாவைத் தவிர வேறு ஆண்டவன் இல்லை. முகம்மது நபி (சல்) அல்லாவின் திருத் துாதர்.
2. தினம் ஐந்து நேரத் தொழுகை.
3. ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு வைத்தல்.
4). ஜக்காத் - ஏழைகளுக்கும், எளிய உறவினர்களுக்கும் கொடை கொடுத்தல்.
ரம்ஜான் மாதத்தில் ஒருவருடைய வருமானத்திலிருந்து இரண்டரை சதவீதம், ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ’தர்ம சமஸ்தா பனார்த்தாய’ என்று பகவத்கீதையில் கூறப்பட்டிருப்பது அன்றாடம் செய்யும் தானம் ஆகும். ஜக்காத் என்பது இஸ்லாமியர்களுக்கு கட்டளை(ட்ச்ணஞீச்tணிணூதூ). ’தர்ம சமஸ்தா பனார்த்தாய’ என்பது தானாகவே(திணிடூதணtச்ணூதூ) முன் வந்து செய்வது. இஸ்லாமிய ’ஜக்காத்’ என்பது, வருமானத்தில் ஏழை எளியவர்களுக்கு இரண்டரை சதவீதம் கொடை கொடுப்பது. இதனை மன்னர் அவுரங்க சீப், ஒரு வரி என்று கருதி, அதற்குச் சமமான வரியை முஸ்லிம்கள் அல்லாதோர் மேல் போட்டார்.
5). மெக்கா, மதினாவிற்கு ஹஜ் (புண்ணியப் பயணம்) செய்தல்.

நோன்பு : ரமலான் மாதம் முழுவதும் விடாமல் நோன்பு வைத்து விட்டால், அச்செயலை சிறப்பானது என்றும் சிறப்பியல்பு கொண்டது என்றும் முகமதுநபி (சல்) பாராட்டுகிறார்கள். இந்த ரம்ஜான் மதத்தில் பேய், பிசாசுகளின் கால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும். ரம்ஜான் மாதத்தில், நோன்பு வைக்கின்றவர்களுக்கு, சொர்க்கவாசல் திறந்து வைக்கபட்டிருக்கும். இந்த சொர்க்கவாசலுக்கு ’ரயான்’ என்று பெயர். ரம்ஜான் மாதத்தில் செய்ய வேண்டிய கடமைகளை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பது ஆண்டவனுடைய உத்தரவாகும்.

இம்மாதத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள், வேலைப்பளுவால் முடியாதவர்கள், தொடர்ந்து பயணம் செய்ய முடியாதவர்கள், நோன்பு வைக்க முடியவில்லை என்றால், உடல் நிலை சரியானவுடன் விடுபட்ட நோன்புகளை ஈடு செய்ய வேண்டும் அல்லது வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டும். நோன்பு வைக்கின்ற முதல் நாள் இரவு, யாராவது பொறுப்பான ஒருவர் புதிய பிறையை பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் தான் நோன்பு வைக்க வேண்டும். ஒருக்கால் மேகமூட்டத்தின் காரணமாக பிறையைக் காண முடியவில்லை என்றால், மாதத்தின் முதல் நாளிலிருந்து 30 நாட்கள் முடிவு பெற்றிருக்கவேண்டும்.

இந்த நாளிலிருந்து நோன்பு (விரதம்) வைக்க வேண்டும். சூரியன் அஸ்தமிக்கிற நேரத்திலிருந்து, சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கிற நேரம் வரை எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம், அதற்கு பிறகு சூரியன் அஸ்தமிக்கின்ற நேரம் வரை எதையும் சாப்பிடக்கூடாது. உமிழ்நீர் கூட விழுங்கக்கூடாது. உடல் நிலை சரியில்லாத வர்கள், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பாலுாட்டுபவர்கள், வயதுக்கு வராத நிலையில் இருக்கும் சிறுமியர், மூன்று நாட்களுக்கு மேல் நடக்க முடியாதவர்கள் - ஆகியோரை தவிர மற்றவர்கள் நோன்பு நாட்கள் முடிந்த பிறகு விடுபட்ட நோன்புகளை முறைப்படி வைக்க வேண்டும். இந்த செய்கை ’குவாசர்’ என்று அரபியில் சொல்லப்படும். தமிழில், ’பிராயச்சித்தம்’ என்று சொல்வோம்.

முறைமைத் தொழுகை : ரம்ஜான் மாதத்தில் மாமூலான, இரவுத் தொழுகைக்கு பிறகு, மேற்கொண்டு 20 தடவைகள், ’முறைமைத் தொழுகை’ (ரக்காயத்) தொழுகப்படும். இதற்கு ’தராவி’ என்று பெயர். மூன்றாவது பத்து நாட்கள், மிகவும் பக்தியோடு கூடிய பெரியவர்கள் பள்ளி வாசலில் சற்று தனியாக ஒதுங்கி இருந்து ’குர்-ஆன்’ ஓதிகொண்டிருப்பார்கள். இதை ’இட்டிகாப்’ என்பர். இந்த கடைசி 10 நாட்களில் ஏதோ ஒரு இரவு வானத்திலிருந்து பூமிக்கு ’குர்-ஆன்’ இறங்கியதை ’லைலத்துல் கதிர்’ என்று அழைப்பர். ’குர்-ஆன்’ இறங்கியது என்பர்.

அந்த நாள், எந்த நாள் என்பது யாருக்கும் தெரியாது.முஹம்மது நபி (சல்) அலைவசல்லம் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். பொதுவாக 27 வது இரவில் தான் குர் -ஆன் வானத்திலிருந்து பூமிக்கு வந்திறங்கியது என்று எல்லோரும் ஏற்று கொள்வர்.இந்த இரவில் தான் விலங்கின சாம்ராஜ்யமும், தாவர இன சாம்ராஜ்யமும் ஆண்டவனிடத்தில் அடிபணியுமாம். ஒரு நிமிடம் கடல் நீர் முழுவதும் இனிப்பாகிவிடுமாம். அரேபியாவில் கி.பி., 622ம் ஆண்டிற்கு முன்பு, 7 வகையான மலைவாழ்மக்கள், மக்கா நகரத்திலும், அதை சுற்றிலும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எந்த முறையும், முறைமையும் இல்லாது வாழ்க்கை நடத்தி வந்தனர். பேசுகின்ற மொழியும் அப்படி தான். அவர்களை ’குரேஷி மக்கள்’ என்பார்கள்.

இவர்களைத் திருத்துவதற்காக முகம்மது (முகமது நபி - சல்) தலைமையில் சிலர் முன் வந்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அதற்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்; ஒரு புரட்சியும் நடத்தினர். அந்த வட்டார மக்கள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் முகம்மதுவை அங்கிருந்து விரட்டி அடிக்க ஏற்பாடு செய்தனர். அந்த நாள் ஜூன் 20, 622 ( அ.ஈ) யாகும். அன்று தான் இஸ்லாம் பிறந்தது. இதை முகமதுவின் ’இடப்பெயர்ச்சி’ என்று சொல்வர். இஸ்லாம் என்பதற்கு ’அமைதி’ என்றும் ’சமாதானம்’ என்றும் பொருள் கொள்ளலாம்.

சிறந்த மாதம் : சூரிய சந்திரன்களில், சந்திரனின் இடப்பெயர்ச்சியை வைத்து மாதங்களை இஸ்லாமியர் கணித்தனர். 1)முகரம் 2.சபர், 3.ரபி -யுல் அவ்வல், 4.ரபியுல்- அக்ஹிர் 5.ஜமதுல் அவ்வல் , 6.ஜமதுல் - அக்ஹிர், 7.ரஜபு, 8.ஷபான், 9.ரம்ஜான்,10.ஷவ்வால், 11. துல் குய்தா, 12.துல் ஹிஜா. இந்த மாதங்களில் சிறப்பான ரம்ஜான் மாதம் தான் ’ரமதான்’ என்றும் ’ரமலான்’ என்றும் பெயர் பெறும்.30 நாட்கள் நோன்பு முடிந்து விட்ட பிறகு, அடுத்த பிறை தெரிந்தவுடன் அதாவது, 9வது மாதம் முடிந்து 10 வது மாதம் ஆரம்பிக்கும் போது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முஸ்லிம்கள் பெரிய அளவில் கொண்டாடுவர்.

பிறை 30 வது நாள் தெரியுமேயானால், நோன்பு அன்றோடு முடிந்து அடுத்த நாள் கொண்டாட்டம் ஆரம்பிக்கும். கொண்டாடுவதில் முதன்மையானது தொழுகை. அடுத்தது உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து, பகிர்ந்து உண்டு, மகிழ்ச்சிகரமாக இருத்தல் ஆகும். பிறை சரியான நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் தெரியவில்லை என்றால் காலண்டர் படி 30வது நாள் இரவு முடிந்த பிறகு, நோன்பை முடித்து விட்டு ’ரமலானைக்’ கொண்டாடுவதில் நாட்டம் செலுத்த வேண்டும்.

ரமலான் கொண்டாடுவதில் முதன்மையானது புத்தாடை உடுத்தி, கொத்துபா - தொழுகைக்குச் செல்லல், பிறகு உறவினர்களையும், நண்பர்களையும் அவர்கள் இருக்குமிடம் சென்று சந்தித்தல் மற்றும் கூடி உண்ணுதல் ஆகியவையாகும். ரமலான் நல்வாழ்த்துக்கள்! ( ஈத்முபாரக்)இந்தியா நமது நாடு! நாம் அனைவரும் இந்தியர்களே!

-- பேராசிரியர் கே.காசிம் ஐ.பி.எஸ்., (ஓய்வு) மதுரை.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்!

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீது (அது) விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (அல் குர் ஆன் 2:183).

இஸ்லாத்தில், ஆண்டுக்கு இரண்டு பண்டிகைகளே உண்டு. அதில் ஒன்று, தியாகத் திருநாள், பக்ரீத் பண்டிகை மற்றும் இரண்டாவது ஈகைத் திருநாள், ரம்ஸான் பண்டிகை.

ரம்ஸான் மாதத்தில் தான், நன்மை, தீமை ஆகியவற்றை பிரித்து அறிவிக்கும், திருக்குர் ஆன் இறக்கி அருளப்பட ஆரம்பமானதாக, திருக்குர் ஆன் 2:185வது வாசகம் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்கும்படி வலியுறுத்திச் சொல்கிறது. இருப்பினும், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் பயணத்தில் இருப்போர், விடுபட்ட நோன்பை மற்ற மாதங்களில் நிறைவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வயோதிகர் மற்றும் தீரா நோய்களில் சிக்கியவர்கள் நோன்பை கடைபிடிக்க முடியாது. இத்தகையோர் விடுபட்ட நோன்பை பிறகு பரிகாரமாக குறைந்தபட்சம், ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது (அன்குர் ஆன் 2:183). விடியற்காலை முதல், மாலையில் அந்தி சாயும் நேரம் வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பதே நோன்பிருத்தல் என்பதற்கு உண்மையான அர்த்தமாகும். இதை அதிகாலை என்கின்ற வெள்ளை நுால், கருப்பு நுால் என்கின்ற இரவு தென்படும் வரையிலும் உண்ணுங்கள்,பருகுங்கள்.

இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று திருக்குர் ஆன் வாசகம் கூறுகிறது. அதாவது, மாலையில், தொடுவானில் கருப்பாகத் தென்பட ஆரம்பிக்கும் முதல், விடியற்காலையில், வானத்தில் வெள்ளையாக தென்படும் வரையில் உண்ணலாம், பருகலாம். மற்ற நேரங்களில் உண்ணாமலும், பருகாமலும் இருக்க வேண்டும். இதுவே நோன்பைப் பற்றி திருக்குர் ஆன் தரும் விளக்கங்களாகும். இனி, நோன்பு கடமையாக்கப்பட்ட தன் நோக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நோன்பைக் கொண்டு இறையச்சமுடையவர்கள் ஆகிவிடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது (2:183). இது, காலம் காலமாக விதியாக்கப்பட்ட ஒன்று என்று சொல்லப்பட்டுள்ளது.

மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், ஏற்ற பின் விளைவுகளை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். செயல்புரிவதற்கு, முழு சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு, அவனுடைய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தீயச் செயல்களுக்கு, ஏற்ற பின்விளைவுகள் துயரம் மிக்கதாகவே இருக்கும். இதைப் பற்றி அச்சம் கொள்வதே இறையச்சம் என்பதாகும். நோன்பிற்கும், இறையச்சத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று, பலருடைய மனதில் சந்தேகங்கள் எழலாம். ஒருவேளை உணவை உட்கொள்ளாததால், இறையச்சம் வந்துவிடுமோ என்றும் பலர் கேட்கின்றனர்.

ஒருவேளை உணவைத் தவிர்த்தல் என்பது அல்ல கேள்வி. இயல்பான வாழ்க்கை முறையை விட்டு விட்டு, மாற்று வாழ்க்கையின் பக்கம் வர, சமுதாய மக்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. அந்த மாறுபட்ட வாழ்க்கை என்பது, மனோ இச்சைப்படி வாழ்வதை விட்டு விட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ விடப்படும் அழைப்பே ஆகும். அதன் ஒரு பயிற்சியாகத் தான் நோன்பு திகழ்கிறது. அதாவது, யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ முன் வருகின்றனர் என்பதை பரிசோதித்துக் கொள்வதே, நோன்பின் சிறப்பு அம்சமாகும்.

மறைமுகமாக ஒருவர் உணவருந்திக் கொண்டே, நோன் பிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இந்த உண்மை அல்லாஹ்வுக்கு தெரிந்துவிடும் என்பதை, உணர்த்தத்தான், இந்த நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது. எனவே, நோன்பை கடைபிடிப்பவர்கள், தாம், அல்லாஹ்வின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ முன்வருவதாக உறுதி கொள்கிறார். இந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டால், மற்ற அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ள முன் வருவதாகப் பொருள்படும்.

இப்படியாக, அனைவரும் இணைந்து அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்தால், தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கி விடலாம். எனவே தான், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக, உலக அரங்கில் அல்லாஹ்வின் புகழை மேலோங்க செய்ய வேண்டும் என்று, திருக்குர் ஆன் 2:188 வாசகம் கூறுகிறது.

பொது வாழ்வு : நோன்பைப் பற்றி கூறுகையில், ’எவ்வாறு நோன்பு நேரங்களில் உண்ணாமல் இருக்கின்றீர்களோ, அவ்வாறே, வாழ்நாள் முழுவதும், பிறருடைய சொத்து செல்வங்களை அநியாயமாக உண்ணாதீர்கள்’ என்றும், திருக்குர் ஆன் 2:188 வாசகம் அறிவுறுத்துகிறது. இவ்வாறே, நோன்பு மற்ற எல்லா அறிவுரைகளுக்கும், கட்டுப்பட்டு வர பயிற்சி அளிக்கிறது.

ஈகைத் திருநாள் : இப்படியாக, மாதம் முழுவதும் நோன்பைக் கடைபிடித்து, ஒரு புதிய உலகை படைக்க அனைவரும் இணைந்து, சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதை குறிக்கும் வகையில், மாதம் முடிவில் முஸ்லிம் பெருமக்கள் திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், அனைவரும் சந்தோஷங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இருப்போர், இல்லாதவர்களுக்கு பித்ரா என்கின்ற நிர்ணயிக்கப்பட்டு குறைந்தபட்ச தொகையை அளித்து உதவுகின்றனர். எனவே தான், ரம்ஸான் பண்டிகை ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

-ஆமினா நுாருல் முபீன்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar