Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ... விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
10:06

திருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், திருமலையில், ஆண்டுதோறும், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும், ஆனி திருமஞ்சனத்தை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும், 24 - 26 வரை, திருமலையில் ஜேஷ்டாபிஷேகம் நடக்க உள்ளது.ஒருமுறை மட்டும் அதற்கு முன், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் களையப்படுவது வழக்கம்.

தங்க கவசத்தை அகற்றி, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கி, அதற்கு பூஜைகள் செய்து, மீண்டும் உற்சவமூர்த்திக்கு தேவஸ்தானம் அணிவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் அணிவிக்கப்படும் தங்க கவசம், ஆண்டில் ஒருமுறை மட்டுமே களையப்படுகிறது.அதன்படி, 19ல், உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் அகற்றப்பட உள்ளது. அதன்பின், அவை சரி செய்யப்பட்டு, 26ல், ஜேஷ்டாபிஷேக நிறைவு நாள் அன்று அணிவிக்கப்பட உள்ளது. அதுவரை உற்சவமூர்த்திகள் தங்க கவசம் இல்லாமல், தரிசனம் அளிக்க உள்ளனர். ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாள், வைர கவசத்திலும், இரண்டாம் நாள், முத்து கவசத்திலும், உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளனர். ஜேஷ்டாபிஷேகம் நடக்க உள்ள நாட்களில், சில முக்கிய ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் : கோடை விடுமுறை முடிந்த பின்னும், வார இறுதி விடுமுறை நாட்களில், திருமலைக்கு, அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தர்ம தரிசன பக்தர்கள், 35 மணி நேரமும், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், 13 மணி நேரமும், ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நேற்று, 2 கி.மீ., தொலைவு வரை தரிசன வரிசை நீண்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar