Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால லட்சுமி சுவாமி கோவிலில் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சுதர்ஸன (சக்கரத்தாழ்வார்) ஜெயந்தி
எழுத்தின் அளவு:
இன்று சுதர்ஸன (சக்கரத்தாழ்வார்) ஜெயந்தி

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
03:06

சக்கரம் என்னும்  சுதர்ஸனம் எம்பெருமான்  மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள  சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. அனந்தன் என்ற நாகம், கருடன்,  சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. வைகுண்டத்தில்  மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.


சுதர்ஸனாழ்வார்,  கருடாழ்வார்,  அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே  பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் – ஆழ்வார் என்ற அடைமொழி. மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும்,  சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை  சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர். “புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை  சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது. இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார். வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில்  சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும். ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.

அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் – மதுரை அழகர் கோவில், திருமோகூர், ரங்கம், வில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கும்பகோணம்  சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர்  சக்கரத்தாழ்வார். தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் – கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம்  வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார். பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன்  சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம். புதனும், சனியும் விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம். தினமும், “ சுதர்ஸனாய ஹும்பட்” என்ற மந்திரத்தையும், “ஓம் ஸுதர்சனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி, தந்நச் சக்ர ப்ரசோதயாத்,” என்ற  சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம். இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!  சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!  சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள  நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். பதினாறு வகைச் செல்வங்களும், கிரக தோஷங்களும் நீங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar