Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் ... விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
11:06

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்க உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. காசிக்கு அடுத்தப் படியாக, வராகநதி கரையோரத்தில் இருபுறங்களிலும் ஆண், பெண் மருதமரங்கள் அமைந்திருப்பது கோயிலின் சிறப்பம்சம். 2013ல் கோயிலில் திருப்பணி துவங்கியது. 72 அடி உயரத்துடன் ஐந்து நிலை ராஜகோபுரம் புதிததாக அமைக்கப்பட்டுள்ளது.


அறம் வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு புதிதாக மூன்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னிமூல கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணியர், சண்டீகேஸ்வரர்,தண்டாயுதபாணி, துர்க்கை, நடராஜர், பைரவர், நாயன்மார்கள், நாகர், பஞ்சலிங்கம், நவக்கிரஹம், உட்பட 157 சாமி சிலைகளும், துாண்களும் பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் 22ல் இருந்து யாகசாலை பூஜைகள் துவங்கியது. மகாகணபதி ஹோமம், தனபூஜை ஆகியவை முன்று நாட்கள் நடந்தது. இன்று (ஜூன் 25ல்) காலை 9:05 முதல்9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர் ராஜாபட்டர்கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். திருப்பணிகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு, ஓ.ராஜா, நாகராஜ், பாண்டியராஜ், டாக்டர் செல்வராஜ் மற்றும் தேனி மாவட்ட அ.தி.மு.க.,அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ரவீந்திரநாத்குமார், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழுத் தலைவர் ஜெயபிரதீப் ஆகியோர் செய்து வருகின்றனர்.--

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar