Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் அமைந்துள்ள பலி ... வியாச பூஜையும் சாதுர் மாஸ்ய விரதமும்! வியாச பூஜையும் சாதுர் மாஸ்ய ...
முதல் பக்கம் » துளிகள்
32 கரங்களை கொண்ட வீரபத்திரர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
32 கரங்களை கொண்ட வீரபத்திரர்!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
04:06

தெய்வங்களுக்கு அதிகபட்சமாக, 16 கரங்கள் வரை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 32 கரங்களை கொண்ட தெய்வத்தைப் பார்த்திருக்கிறீர்களா! பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில், 32 கரங்களுடன் கூடிய வீரபத்திரரைத் தரிசிக்கலாம். தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல், யாகம் நடத்தினான் பார்வதியின் தந்தை தட்சன். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், யாகசாலையை அழிக்க, தன் அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பினார். முப்பத்திரண்டு கைகளுடன் விஸ்வரூபம் எடுத்த வீரபத்திரர், யாக குண்டத்தை அழித்து, யாகத்தின் பலனை ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். இதன் அடிப்படையில், 32 கைகளுடன், ’பிரளய கால வீரபத்திரர்’ சிலை வடித்து, கோவில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோவில் அழிந்து விட்டது. சிலையும் மண்ணில் புதைந்தது.

பிற்காலத்தில், ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி வீசியதைக் கண்டான். புதரை விலக்கிய போது, 32 கை வீரபத்திரர் சிலை கிடைத்தது. அச்சிலையை பிரதிஷ்டை செய்து, மீண்டும் கோவில் எழுப்பினான். செவ்வாய் கிழமைகளில் வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று, தேங்காய்த் துருவலால் அலங்காரம் செய்வது விசேஷம். வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், அவரைக் குளிர்வித்து சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர். சுவாமி சன்னிதி வலப்புறமுள்ள குன்றில், வீர ஆஞ்சனேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னிதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் (சிவன்) காட்சி தருகிறார். விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலிங்கம் மற்றும் பார்வதிக்கு, தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
நவக்கிரக சன்னிதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகிறார். வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட, 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னிதி எதிரில் நந்தி உள்ளது.

தை மாதம் ரத சப்தமிக்கு முதல் நாள் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டம் ஏற்றுவர். அர்ச்சகர்கள் இருவர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைப்பர். அதில் சாம்பிராணி துாபமிட்டு வீரபத்திரருக்கு பூஜை செய்வர். அதன்பின் மூவரும் அக்னி குண்டத்தில் இறங்குவர். அன்று வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருவார். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், மதிப்புக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்பட்டவர்கள் ஆகியோர் இங்கு வந்து வீரபத்திரரை வணங்கி, நிவாரணம் பெறலாம். பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கிருந்து சற்று துாரம் நடந்தால் கோவிலுக்குச் சென்று விடலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar