ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 03:06
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமனை விட்டுப் பிரிந்த சீதையை மீண்டும் அவரோடு சேர்த்து ராம பட்டாபிஷேகம் செய்ததில் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது.
அனுமன் மட்டுமில்லாமல், வானரப் படையும் இலங்கை யுத்தத்தில் ராமனுக்குத் துணை நின்று உதவியது. தனக்கு உதவிய வானரக் கூட்டத்துக்கு தன் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில், விருந்தளித்தார் மகாவிஷ்ணு. பாலகிருஷ்ணராக கோகுலத்தில் வளர்ந்தபோது, வெண்ணெய் திருடி உண்பது அவரின் பொழுது போக்கு. வெண்ணெய் வாசனை காற்றில் பரவ, குரங்குகளின் கூட்டம் ஓடி வந்து ஜன்னல் வழியாக கையை நீட்டும். கிருஷ்ணர் அவற்றுக்கும் வெண்ணெயைக் கொடுத்து மகிழ்ந்தார். அவை, சாப்பிட்டது போக, மீதியை மகிழ்ச்சியுடன் தன் உடலெங்கும் பூசிக்கொண்டதாம். இதனால்தான், ஆஞ்சநேயருக்கும் உடலெங்கும் வெண்ணெய்காப்பு செய்து வழிபடும் வழக்கம் உண்டானது என்று ‘மர்காந்போக்ஷ்யன்’ என்ற பாகவதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.