Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை பாக்கியம் கேட்டு ‘தொட்டில்’ கட்டும் பெண்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
05:07

ஆத்துார்: கைலாசநாதர் கோவிலில், குழந்தை பாக்கியம் கேட்டு, பெண்கள், ‘தொட்டில்’ கட்டி வருகின்றனர். பாசி பயிறு பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு, குழந்தைப்பேறு கிடைப்பதாக, பெண்கள் நம்புகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார், வசிஷ்ட நதி தென்கரையிலுள்ள, 400 ஆண்டுகள் பழமையான, கைலாசநாதர் கோவிலில், பராசக்தி காமாட்சி அம்பிகை, துர்க்கை, பிரித்தியங்கிராதேவி, சொர்ண பைரவர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. ஸ்தல விருட்சமாக மா, அத்தி மரங்கள் உள்ளன. இடதுபுறம், தீர்த்தக்கிணறு உள்ளது.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், காமாட்சி அம்பிகை சன்னதி முன், மரத்தொட்டில்களை தொங்க விடுகின்றனர். ஆடிப்பூர நாளில், அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. அப்போது, முளை கட்டிய பாசி பயிறுகளை, அம்மனின் வயிற்றில் கட்டுகின்றனர். பின், பயிறுடன் குறைந்தளவில் சர்க்கரை கலந்து, குழந்தை பாக்கியம் கேட்டு வழிபடும் பெண்கள், திருமணம் வேண்டி வரும் பக்தர்களுக்கு, பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஓராண்டில், குழந்தை வரம் கிடைப்பதால், பலர் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்ததும், தொட்டிலை அவிழ்த்துவிட்டு, கைலாசநாதர், காமாட்சி அம்மனுக்கு வஸ்திரம் உடுத்தி, அபி ேஷகம் செய்து காணிக்கை செலுத்துகின்றனர். ஆக., 13 ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நடக்கவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar