Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் ... பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
10:07

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் புதியதாக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் தயாரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது.

இக்கோவில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். மிகவும் பழமையான தேர் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில், 30 பேர்கொண்ட குழுவினர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 18.75 அடி நீளம் மற்றும் உயர அளவில் புதியதாக தேரினை செய்தனர். இழுப்பை மரம் 1250 கண அடி, தேக்குமரம் 20 கண அடி, இரும்பு சாமான்கள் 3 டன் கொண்டு செய்துள்ளனர். தேரில் சிவன், பார்வதி, அப்பர் கயிலைகாட்சி, சுவாமி மலை முருகன், மற்றும் 25,26 குருமகா சன்னிதானங்களின் சிற்பங்கள் உட்பட 450 சிற்ப்பங்கள், 250 மணிகள் கொண்டு பழமை மாறாமல் பணிகள் முடிந்து நிலையில், நேற்றுமுன்தினம் மாலை புனிதநீர் எடுத்துவரப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை, மஹா பூர்னாதி செய்யப்பட்டது. நேற்று காலை இரண்டாம் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் எடுத்துவரப்பெற்று தேருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு. காலை 9 மணிக்கு தேரின் மேல் கும்பம் வைத்து நான்கு முக்கிய வீதிகளின் வழியாக வந்து தேர்நிலையை வந்தடைந்தது. இதில் இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar