Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளிப்பட்டினம் திரவுபதி அம்மன் ... திருமலை ஏழுமலையான் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அனுமதி திருமலை ஏழுமலையான் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2018
10:07

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழாவிற்காக பக்தர்கள் செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளதாக, விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா ஆகஸ்ட் 9 முதல் 11 வரை நடக்கிறது. விழாவிற்கு சிலநாட்கள் முன்னதாகவே பக்தர்கள் அடிவாரத்தில் முகாமிட்டு அன்னதானம் வழங்கி மலையேறி தரிசனம் செய்து திரும்புவர்.பல லட்சம் பக்தர்கள் திரளும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரப்பிரபா, உட்பட அதிகாரிகள் மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் இடங்கள், தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமையும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டனர்.

கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:சதுரகிரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களுக்கு மட்டும் சில நிபந்தனைகளின் பேரில் அனுமதி வழங்கப்படும். தனியார் வாகனங்கள் 7 கி.மீ., தொலைவுக்கு முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மூலமாக அடிவாரம் செல்ல வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். விழா ஆகஸ்ட் 9ல் துவங்கி 11ல் முடிகிறது. அதற்கு 2 நாட்கள் முன்பும் 1 நாள் பின்பும் என 6 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை(ஆக. 26 ) நான், மதுரை கலெக்டர் , அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதன் பின் இறுதி முடிவு செய்யப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar