Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்: பரிகாரம் யாருக்கு ... பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய்லாந்து குகையில் சிக்கி மீண்ட சிறுவர்கள் துறவறம் சென்றனர்
எழுத்தின் அளவு:
தாய்லாந்து குகையில் சிக்கி மீண்ட சிறுவர்கள் துறவறம் சென்றனர்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
10:07

பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கி, மீட்கப்பட்ட சிறுவர்கள், தங்களைக் காப்பாற்றிய நீச்சல் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ௧௨ சிறுவர்களும் மொட்டை அடித்து, தற்காலிக துறவு மேற்கொண்டுள்ளனர்.  தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் சியாங் ராய் என்ற பகுதிக்கு, 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர், சமீபத்தில் சுற்றுலா சென்றனர். பல, கி.மீ., நீளம் உடைய குகைக்குள், அவர்கள் சென்றபோது, பலத்த மழை கொட்டியது. குகைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், குகையை விட்டு வெளியேற முடியாமல், உள்ளுக்குள் சிக்கினர். இவர்களை மீட்க, பல்வேறு முயற்சி செய்தும், மீட்புப் பணி தோல்வி அடைந்தது.
 
இதையடுத்து, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கடும் முயற்சியை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பின், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுவர்கள், அங்குள்ள புத்த கோவிலில் நேற்று கூடினர். தங்கள் தலையை மொட்டையடித்து, புத்த துறவிக்கான ஆடை அணிந்தனர். தங்களை மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக, சில நாட்கள் துறவு நிலையை மேற்கொள்ளப் போவதாக, அவர்கள் அறிவித்தனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், சிறுவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
பிரிட்டன் பிரதமர் வாழ்த்து: தாய்லாந்து குகையில், 17 நாட்களாக சிக்கித் தவித்த, கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 12 சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட, பிரிட்டன்  நீச்சல் வீரர்களுக்கு, அந்நாட்டு பிரதமர், தெரசா மே நேற்று, வாழ்த்து தெரிவித்தார்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar