Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி கந்தமாரியம்மன் கோவிலில் ... சூலுார் மாகாளியம்மனுக்கு முப்பெரும் விழா சூலுார் மாகாளியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு கோலாகலம்: புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2018
10:08

திருச்சி: ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலைலேயே வந்து புனித நீராடினர். தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடி, 18ம் பெருக்கு பண்டிகை. ஆடிப்பெருக்கு பண்டிகை காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

Default Image
Next News

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை, 4 மணி முதலே மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர், கன்னி பெண்கள் என அனைவரும் முளைப்பாரி, மங்கல பூஜை பொருட்கள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். காவிரியில் நீராடி புத்தாடை அணிந்து முளைப்பாரி, திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பின் படித்துறையில் வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம், தேங்காய், பூ, பழம் வைத்து பூஜை செய்து காவிரிக்கு கற்பூர ஆரத்தி காட்டி குடும்பத்துடன் வணங்கினர்.

காவிரி தாயை நினைத்துக் கொண்டு சுமங்கலி பெண்கள் புதிய தாலி சரட்டை மாற்றிக்கொண்டனர். திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப்பெண்களும் திரண்டு வந்து காவிரித்தாய்க்கு பூஜை செய்து ஆற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் மஞ்சள் நூலை சுற்றி வழிபட்டனர். பின் ஸ்ரீரங்கநாதர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.இதே போல் அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட காவிரி பாயும் இடங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி பூஜை செய்தனர். படித்துறையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று மாலை 4 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தளினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar