Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழனி மாரியம்மன் கோவிலில் ... ஜாக்கிகள் மூலம் 4 அடிகள் உயர்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி
எழுத்தின் அளவு:
மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

பதிவு செய்த நாள்

03 ஆக
2018
01:08

ஆடிவெள்ளியும், ஆடிப்பெருக்கும் இணையும் நன்னாள் இன்று. இந்நாளில் காவிரியன்னையுடன் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அம்மன்கள் மற்றும் மகா லட்சுமியை வழிபட்டால் மங்கள வாழ்வு உண்டாகும்.

* பெருக்கு என்றால் பெருகுதல் மட்டுமல்ல, சுத்தம் செய்தல் என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு துாய்மை பெறும். மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

*தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல்களால் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். அதோடு தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

*லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar