Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி சிலைகள் உருவேற்றம் நிகழ்ச்சி சிங்கம்புணரியில் ஆடிபெருக்கு அன்னதானம் சிங்கம்புணரியில் ஆடிபெருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2018
11:08

திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் நேற்று ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், மலையடிவாரம் பத்திர காளியம்மன், பெரியகடை விதி பாதாள காளியம்மன், கவடக்காரத்தெரு காளியம்மன் கோயில், ஆர்.எம்., காலனி அம்மன் கோயில், முருகபவனம் பத்திரகாளியம்மன் கோயில், திருச்சி ரோடு தீப்பாச்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், பன்னாரி அம்மன் உட்பட பல கோயில்களில் ஆடிப் பெருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கூழ் காய்ச்சி பிரசாதம் வழங்கப்பட்டது. கோட்டைக் குளத்தில் பெண்கள் பூஜை செய்து, மங்கள பாக்கியம் பெற புதுத்தாலி கட்டிக் கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்: விருப்பாட்சி தலையூற்று பகுதியில் பொதுமக்கள், புதுமணத்தம்பதிகள் குளித்து, புத்தாடை அணிந்து, கோயில்களில் வழிபட்டு சென்றனர். ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில், அபிேஷகங்களுடன் மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில், தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேடசந்துார்:  வேடசந்துார் நாகம்மாள் கோயிலில், கணபதி ஹோமம், தீபாராதனை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்சிகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.  ரெங்கமலை மல்லீஸ்வரன் கோயில், புங்கம்பாடி காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


ஆத்துார்: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குகைக்கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலவித காவடிகளை சுமந்தும், உடலில் அலகு குத்தியும் வந்தனர்.

தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் திருமஞ்சன அபிேஷகத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சின்னாளபட்டி;  சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில், கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், திருவிளக்கு பூஜை, வளைகாப்பு விழா நடந்தது. சிறப்பு ேஹாமத்துடன், ஆடிப்பெருக்கு ஆராதனை நடந்தது. அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், அம்பாத்துரை வீரபக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி பை-பாஸ் ரோடு சந்தனக்கருப்பணசுவாமி கோயிலில் அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar