Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமிர்த்தகடேஸ்வரர் கோவில் ... கொளஞ்சியப்பருக்கு சந்தனக்காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
12:01

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் பழமை வாய்ந்த, ஸ்ரீ சவுந்திரவள்ளி உடனுறை ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பல வருடங்களாக சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில், கடந்த 2009ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு மரத்தேர் செய்ய, திருஞானசம்பந்தர் தெய்வ திருப்பணி அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு தேர் திருப்பணி துவங்கப்பட்டு, 27 அடி உயரத்திற்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் தேர் தயார் செய்யப்பட்டது. மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்தபதி புஷ்பராஜ் தலைமையில் ஸ்தபதிகள் தேரை உருவாக்கினர். தேர் திருப்பணி முடிந்து, நேற்றுமுன்தினம் காலை கணபதி ஹோமம், முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை 5.45 மணிக்கு, ஸ்ரீ சவுந்திரவள்ளியுடன், பூதபுரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். ­­­­­தேரோட்ட விழாவில் ஏரளாளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் தெய்வ திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar