Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... மீனாட்சி கோயில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது மீனாட்சி கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதநாச்சியம்மன் கோவில் ஆடி திருவிழா : 2,000 கிடாய்கள் வெட்டி விருந்து
எழுத்தின் அளவு:
பூதநாச்சியம்மன் கோவில் ஆடி திருவிழா : 2,000 கிடாய்கள் வெட்டி விருந்து

பதிவு செய்த நாள்

09 ஆக
2018
05:08

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே சின்னக்கோசணத்தில், பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவிலில், ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2,000 கிடாய்கள் வெட்டி, மெகா விருந்து நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூர் தாலுகா, சின்னக்கோசணத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவில் உள்ளது. ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை, 3ல் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று இரவு, படைக்கலம் பூஜை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணி முதல், விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து, பொது கிடாய்கள் சுவாமிக்கு வெட்டப்பட்டது.
 
கோவிலுக்கு வேண்டியிருந்தவர்கள் மொத்தம், 2,000 கிடாய்களை நேர்த்திக்கடனாக வெட்டினர். காட்டு கோவிலில் கிடாய்கள் வெட்டி, வீட்டு கோவிலில் கறிகள் வெட்டப்பட்டன. அரை ஏக்கர் பரப்பளவில் கீற்று ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட உருளி அண்டாக்களில், கறி விருந்து செய்யப்பட்டது. ஒன்பது டன் அரிசி, மூன்று டன் சிறிய வெங்காயம், 500 கிலோ வரமிளகாய், 50 கிலோ மிளகு, மூன்று மூட்டை மல்லி , 10 டின் எண்ணெய், 10 டன் விறகு கொண்டு கறி சமைக்கப்பட்டது. சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டப்பட்ட, அனைத்து கிடாய்களும் கறியாக சமைத்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar