Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி தீர்த்த கடலில் தீர்த்த வாரி: ... விநாயகர் சிலைகள் அமைக்க அரசு 24 நிபந்தனைகள் விநாயகர் சிலைகள் அமைக்க அரசு 24 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரிக்கு வந்த கேரள பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குமரிக்கு வந்த கேரள பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
12:08

நாகர்கோவில்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை, 3:30 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, தர்ப்பணம் கொடுத்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், கேரளா, மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர்.இதையொட்டி, நேற்று கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும், வாகன  நெரிசலுமாக காணப்பட்டது. தர்ப்பணம் செய்த பக்தர்கள், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியதால், கோவிலிலும் கடும் கூட்டம் நிலவியது.

மூன்று மணி நேரத்திற்கு மேல், வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் பகவதியம்மனை வழிபட்டு சென்றனர்.ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் மட்டுமே திறக்கப்படும் பகவதியம்மன் கோவில் கிழக்கு வாசல், நேற்று திறக்கப்பட்டது. அதன் வழியாக பகவதியம்மன்  கோவிலுக்குள் பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆற்றில் நீராடி, அங்குள்ள வாவுபலி மைதானத்தில் தர்ப்பணம்  கொடுத்தனர்.கேரள மாநிலத்தில் கனமழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு தர்ப்பணம் கொடுக்கும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இதனால், வழக்கத்தைவிட அதிக அளவில், கேரள பக்தர்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.உள்வாங்கிய கடல்பக்தர்கள் சிரமம்கன்னியாகுமரி கடலை பொறுத்தவரை,  அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் உள் வாங்கும் நிகழ்வு வழக்கமாக நடக்கும். இந்நேரத்தில், கன்னியாகுமரி படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதுண்டு. ஆடி அமாவாசையான நேற்றும், முக்கடல் சங்கமத்தில் கடல் உள் வாங்கியது. வழக்கத்தைவிட, 10  மீட்டருக்கு மேல் கடல் உள்பகுதிக்கு சென்ற நிலையில், கடலுக்குள் இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால், பக்தர்கள் நீராட சிரமப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar