Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வளையல் அலங்காரத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் காட்சி வளையல் அலங்காரத்தில் புதுப்பாளையம் ... திரவுபதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை விமரிசை திரவுபதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேட்டதை தரும் ஆண்டாள்... தேர் இழுக்கலாம் வாங்க
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
13:38

ஸ்ரீவில்லிபுத்துார்:ஆண்டாள். பெண் இனத்தின் பெருமைமிகு தெய்வம்.பெரியாழ்வரின் புதல்வியாக தோன்றியவள்.ஆடிப்பூரத்தில் அவதரித்தவள்.திருப்பாவை பாடியவள். ஸ்ரீவில்லிபுத்துாருக்கு பெருமை சேர்த்தவள். இத்தனை பெருமை வாய்ந்த ஆண்டாளின் திருவடிகளில்  சரணாகதி அடைந்து வணங்கினால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். நினைத்தது நடக்கும். தொழில் சிறக்கும்.

வீட்டில் ஐஸ்வர்யம் பொங்கும். குழந்தைகள் நற்கல்வி, வேலைவாய்ப்பு பெறுவார்கள். பெண்களுக்கு நற்கணவன் கிடைத்து வாழ்வு சிறக்கும். இதை  அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தி ஆண்டாளை வணங்குகின்றனர். அத்தகைய சிறப்பு மிக்க ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பெரிய தேரில் எழுந்தருளி, நகரின்  நான்கு ரதவீதிகளிலும் வலம் வரும்போது விண்ணிலிருந்து நம்மை ஆசீர்வதிப்பதுபோல் காட்சியளிப்பார். அத்தருணத்தில் தேரின் வடத்தினை தங்கள் மார்பில் தாங்கி, முழு பக்தியுடன் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் இழுத்தால் நாம் நினைத்த காரியங்கள்  கைகூடும். எனவே, நாளை நடக்கும் தேரினை வடம்பிடித்து இழுக்க ஆண்டாள் நகரில் கூடுவோம்.

ஐஸ்வர்யம் பொங்கும்:  ஆண்டாளிடம் சரணாகதியடைந்து என்றும் அவள்நினைப்பில் இறைநம்பிக்கை கொள்வது, நம் தலைமுறை தலைமுறைக்கு நல்லவனவற்றை எல்லாம் பெறலாம். வீட்டில் ஐஸ்வர்யம் பொங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில்  மேன்மையடையும். இதனாலே ஆடிப்பூரதிருநாளில் தேரினை இழுத்து ஆண்டாள் அருள்பெறவேண்டும்.

-வேதபிரான் அனந்தராமன் பட்டர், ஸ்ரீவில்லிபுத்துார்.

நல்ல வரன் அமையும்: ஆண்டாள் அருளிய வாரணமாயிரம் பாடல்களை தினமும் சொல்லி வந்தாலும், சொல்வதை கேட்டு வந்தாலும் கண்டிப்பாக மூன்று மாதங்களில் நல்லவரன் அமைந்து திருமணம் மிகசிறப்பாக நடக்கும். இதற்கு நம்பிக்கையுடன் பக்தி செய்து வந்தாலே கைமேல் பலன்  கிட்டும்.

-ஜெய ஸ்ரீராமன், நியுமராலஜிஸ்ட், ஸ்ரீவில்லிபுத்துார்.

உயர்வினை தருவாள்: உண்மையான பக்தியுடன் ஆண்டாளிடம் சரணாகதியடைந்து பக்தியுடன் வேண்டினால், வேண்டியது நிறைவேறும். இன்றைய காலத்தில் நாம் வேண்டியது நிறைவேற இறைபக்தி மிகவும் அவசியம். அதுவும் பெண்கள் முழுஅளவில் கடைபிடிக்கவேண்டும். தன்னலம்  கருதாமல் பிறர்நலன்காக்கும் வகையில் ஆண்டாளிடம் வேண்டும்போது. நமக்குரிய உயர்வினை ஆண்டாள் தருவாள்.

- மாசில்லாராணி, பேராசிரியை, ஸ்ரீவில்லிபுத்துார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: மழை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில், நாதஸ்வர கலைஞர்கள் ... மேலும்
 
temple
திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 26 மணிநேரம் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறை நிறைவு ... மேலும்
 
temple
திருத்தணி:  திரவுபதியம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி திருவிழாவில், 18 நாளில், நேற்று, காலை படுகளத்தில் ... மேலும்
 
temple
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு ... மேலும்
 
temple
 உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில் கோபுரம் பராமரிப்பின்றி இருப்பதால், மரக்கன்றுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.