Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்காலில் வரலட்சுமி விரதம் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பையில் ராணுவ உதவியுடன் தற்காலிக பாலம் தேவசம்போர்டு அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

சபரிமலை, சபரிமலையில் பக்தர்கள் செல்வதற்காக பம்பை ஆற்றின் குறுக்கே ராணுவ உதவியுடன் போர்கால அடிப்படையில் இரண்டு இரும்பு பாலங்கள் அமைக்கப்படும், எ-ன கேரள மாநில  தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.கேரளாவில் பெய்த பெருமழையில் பம்பையில் இரண்டு பாலங்கள் உடைந்தது. பம்பை ஆற்றில் மண் குவிந்து, வேறு பாதையில்  ஓடுகிறது. பெரும்பாலான கட்டடங்களும் இடிந்து விட்டது. கோர்ட் உத்தரவு படி ஓண பூஜைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. புரட்டாசி மாத பூஜைக்கு பக்தர்களை அனுப்ப வேண்டும் என்ற  அடிப்படையில் தற்போது பணிகள் விரைவாக நடக்கிறது.கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் பம்பையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.பின்னர்  அவர் கூறியதாவது:பம்பை நதியின் குறுக்கே இரண்டு இரும்பு பாலங்கள், ராணுவத்தின் மூலம் அமைக்கப்படும்.ஒரு பாலம் பக்தர்கள் செல்வதற்காகவும், ஒரு பாலம் பொருட்கள் கொண்டு வரும்  வாகனங்கள் செல்வதற்கும், ஆம்புலன்ஸ் செல்வதற்கும் பயன்படுத்தப்படும். பம்பை ஹில்டாப்பையும், கணபதிகோயிலையும் இணைத்து இந்த பாலம் அமையும். பம்பையில் மலையாக குவிந்துள்ள  மணல் அப்புறப்படுத்தப்பட்டு, நதியை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.பம்பையில் கூடுதல் பயோ -டாய்லட்டுகள் அமைக்கப்படும். குடிநீர் வழங்கும் பணி  துரிதப்படுத்தப்படும். சேதமைடந்த ரோடுகளில் பக்கசுவர் கட்டி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும். ஒரு வழிப்பாதை உள்ளிட்ட போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்படும். பம்பையில்  ராமமூர்த்தி மண்டபம் இடிந்து விட்டதால் தற்காலிக மண்டபம் நிறுவப்படும். பம்பை மருத்துவமனையில் மருந்துகள் தண்ணீர் அடித்து சென்று விட்டதால் கூடுதல் மருந்துகள்  வரவழைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar