Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பம்பையில் ராணுவ உதவியுடன் தற்காலிக ... விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

சிவகங்கை: சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் உள்ள கீழக்கண்டனி, உச்சப்புளி, வெள்ளஞ்சி ஆகிய 3 கிராம மக்கள் சார்பில் வெள்ளஞ்சியில் உள்ள மஞ்சக்கொத்து அய்யனார் கோயில் புரவி  எடுப்பு மற்றும் அழகு நாச்சியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த 1996 ல் நடைபெற்றது. அப்போது 3 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நிறுத்தப்பட்டது.  அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு 3 கிராம மக்களும் ஒன்றுகூடி, பிரச்னைகளை மறந்து மீண்டும் திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.

கடந்த ஆக., 17 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு 3 கிராமமக்களும் ஒன்று கூடி கோயில் நிர்வாகிகளை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர்.  இரண்டாம் நாள் திருவிழாவில் 3 கிராமமக்களும் பரவிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி பிற்பகல் 2:00 மணிக்கு மேலவெள்ளஞ்சி வழியாக மஞ்சகொத்து அய்யனார் கோயிலில் குதிரைகளை இறக்கி  வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் பூஜாரி மாயழகு, 80,கூறுகையில், 22 வருடங்களுக்கு பிறகு 3 கிராம மக்களும் ஒற்றுமையாக இணைந்து திருவிழா நடத்தியதால் இந்தாண்டு நல்ல  மழை பெய்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar