பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
ஈரோடு: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ஹரே கிருஷ்ண மையம் சார்பில், செப்., 2ல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை நடக்க உள்ளது. ஈரோடு, திண்டல் மாருதி நகரில் உள்ள யூ.ஆர்.சி., பழனியம்மாள் பள்ளி மைதானத்தில் அன்று மாலை, 4:00 மணிக்கு தூப ஆரத்தி, ஹரி நாம சங்கீர்த்தனம், 5:00 மணிக்கு கிருஷ்ண கதா - உபன்யாசம், 6:00 மணிக்கு ஹரி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. 7:15 மணிக்கு கிருஷ்ண கதா - உபன்யாசம், 8:00 மணிக்கு மஹா அபி ஷேகம், 9:15 மணிக்கு மஹா ஆரத்தி, 9:30 மணிக்கு பிரசாதம் வினியோகம் நடக்க உள்ளது.