Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தி விழா: வீடு, ... மாமல்லபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மாமல்லபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கிருஷ்ண ஜெயந்தி: குருவாயூரப்பா... திருவருள் தருவாய் நீயப்பா!
எழுத்தின் அளவு:
இன்று கிருஷ்ண ஜெயந்தி: குருவாயூரப்பா... திருவருள் தருவாய் நீயப்பா!

பதிவு செய்த நாள்

02 செப்
2018
12:09

குருவாயூர் கிருஷ்ணர் மீது நாராயண பட்டத்திரி பாடியது நாராயணீயம். இதைப் படித்தால் விருப்பம் நிறைவேறும்.


மகாவிஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படும் உயர்வான சச்சிதானந்த வடிவம் கொண்டவனே! கோபியரின் மனங்களில் இருப்பவனுமாகிய உன்னை துன்பம் தீர அடியேன் வணங்குகிறேன்.  மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரா! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பது நீயே என்று சொல்லப்பட்டு உள்ளது. உன்னையே ஆதி சங்கரரும் அதிகமாக ஆராதித்துப் போற்றியுள்ளார். உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.  தேவாதி தேவனே! எல்லாருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மையில்லாத பொருட்களில் விருப்பம் கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென, உன் பாதங்களை வணங்குகிறேன்.      


எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், மொழியாலும், உள்ளத்தாலும் இப்பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.  உன்னிடம் சரணடைந்தவர், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். தேவாதிதேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்வாக்கால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.     

ஜகந்நாதா! ஹரி! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு முதலியவற்றையும், நண்பர்கள், எதிரிகளையும் கூட, உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன். பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால், வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால் மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.      

பெருமாளே! கலிகாலத்தில், உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலுமே போதும்! உன் அருளைப் பெற்று விடலாம் என்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கியவசத்தால் இந்தக் கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக்கொள்வாய்! புருஷோத்தமா! கங்கா நதியில் குளித்தல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்ராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளைப் பெற்றுத்தரும். இந்த எட்டு மார்க்கங்களிலும் என்னை ஈடுபடுத்தி, உன்னை அடைய அருள் செய்வாயாக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar