Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டது துலங்க தொப்பையப்பன் ... புன்னகையில் பூத்த மலர் புன்னகையில் பூத்த மலர்
முதல் பக்கம் » துளிகள்
’பொல்லாதவர் ’ சாப்பிட்ட பொங்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
’பொல்லாதவர் ’ சாப்பிட்ட பொங்கல்

பதிவு செய்த நாள்

10 செப்
2018
04:09

பிள்ளைக் கடவுளான விநாயகரும் ’பொல்லாப் பிள்ளையார்’ என பெயர் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்றை படித்தால் அதற்கான காரணம் புரியும்.  சம்பந்தர், அப்பர்,  சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் நைவேத்யம் செய்வது வழக்கம். ஒருமுறை தந்தை வெளியூர் சென்றதால்  பூஜை செய்ய சிறுவனான நம்பியாண்டார் நம்பியை அனுப்பினார். பொங்கல் படைத்த நம்பி, அதை சாப்பிடும்படி விநாயகரை வற்புறுத்தினார். நேரம் கடந்து கொண்டிருந்தது. ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை.  மனம் வருந்திய அவர் விநாயகர் சிலையில் முட்டி அழுதார்.

அவரது பக்திக்கு கட்டுப்பட்ட விநாயகர்  பொங்கலை சாப்பிட்டார். அன்று கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவில்லை.  விநாயகரே சாப்பிட்டதாக நம்பி தெரிவிக்க யாரும் நம்பவில்லை.  தகவலைக் கேள்விப்பட்ட மன்னர் ராஜராஜசோழனுக்கு உண்மையை அறிய ஆவல் எழுந்தது.  பொங்கலுடன் கோயிலுக்கு வந்த மன்னர், அதை நைவேத்யம் செய்யும்படி கூறினார்.  விநாயகர் அதை  சாப்பிடாமல் தாமதிக்கவே, நம்பியாண்டார் நம்பி பாடல்கள் பாடினார். இதுவே  ’இரட்டை மணிமாலை’  எனப்படுகிறது. மனமிரங்கிய விநாயகர் அனைவரும் அறிய சாப்பிட்டார். இந்த விநாயகரின் சிலை உளியால் செதுக்கப் படாதவர்  என்பதால் ’பொள்ளாப் பிள்ளையார்’ என அழைக்கப் பட்டார். ’பொள்ளா’ என்றால் ’செதுக்கப்படாத’ என்பது பொருள். நாளடைவில் ’பொல்லாப்பிள்ளையார்’  என்றாகி விட்டது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் திருநாரையூர் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar