Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டியில் சதுர்த்திக்கு ... விநாயகர் அவதாரம்! விநாயகர் அவதாரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்கு தடுப்பு துருப்பிடிக்காத உலோக கம்பியால் அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2018
12:09

மாமல்லபுரம்:மாமல்லபுரம், பாரம்பரிய சின்ன கடற்கரைக் கோவில் வளாக பாதுகாப்பிற்கு, கடற்காற்றால் துருப்பிடிக்காத, உலோகக் கம்பி தடுப்பு அமைக்கப்படுகிறது.

பல்லவ சிற்பக்கலை சின்னங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரியக் கலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. கடற்கரை கற்கோவில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட, பாண்டவ ரதங்கள், அர்ச்சுணன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

கடற்கரைக்கோவில் உள்ளிட்ட பாரம்பரியச் சின்ன வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள, கம்பி வேலித் தடுப்பு சீரழிந்து, இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.பாரம்பரியச் சின்ன பாது காப்பு கருதி, வளாகத்தைச் சுற்றிலும், சில அடி உயர சுவர், அதில் குறிப்பிட்ட உயர கம்பிவேலி தடுப்பு என, பல ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அமைத்தது.

கம்பித்தடுப்பில், வர்ணம் தீட்டி பராமரித்தாலும், கடலோர பகுதி என்பதால், துருப்பிடித்து சீரழிகிறது.இதையடுத்து, மின்சார, மொபைல் போன் கோபுரங்கள் அமைக்க பயன்படுத்தும் தரமிக்க, துருப்பிடிக்காத உலோகத் தடுப்பு அமைக்க முடிவெடுத்தது.

இத்தடுப்பு, குறிப்பிட்ட நீள, அகல, உயர அளவிலும், கூர்முனையுடனும், சென்னையில் தயாரிக்கப்பட்டது.தற்போது, மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டு, கோவிலைச் சுற்றி, 600 மீ., சுற்றளவிற்கு, இத்தடுப்பு அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:மூன்றாண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்ட, கம்பித் தடுப்பு, கடற்காற்றால் துருப்பிடித்து பெயர்ந்தது. தற்போது, நவீனமாக அமைக்கி றோம். ஐ.ஐ.டி., பரிசோதனையின்படி, குறைந்தபட்சம், 10 - 15 ஆண்டுகள், இக்கம்பிகள் துருப் பிடிக்காமல் நிலைத்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar