Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு அரங்கநாதர் கோவிலில் ... நாமக்கல்லில் மோகனூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (செப்.,17ல்)புரட்டாசி உற்சவ திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
02:09

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புராட்சி உற்சவ திருவிழா, இன்று (செப்., 17ல்) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச் சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலய வல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான அரிவாள் பாழியும் மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழியும் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட, ஒரே பாறை மீது இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று செப்.,17ல் புரட்டாசி உற்சவ விழா துவங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை யும், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதில், மூன்றாவது வாரம், வரும் பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். வரும், 22ல், முதல் சனிக்கிழமை, 29ல், இரண்டாவது, அக்., 6ல், மூன்றாவது, 13ல், நான்காவது சனிக்கிழமை. இந்த நாட்களில், சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar