Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிலக்கோட்டையில் நடராஜர் கோயில் ... சபரிமலையில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர் சபரிமலையில் நடை திறப்பு: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி, சிங்கம்புணரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி, சிங்கம்புணரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 செப்
2018
03:09

காரைக்குடி: காரைக்குடியில் இந்து முன்னணி, பா.ஜ., சார்பிலான விநாயகர் சிலை விசர்ஜன விழா இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அக்னி பாலா தலைமையில் நடந்தது.

காசி விஸ்வநாதன், தாமரை சரவணன் முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தொடங்கி வைத்தார். டி.டி.நகர், முத்துப் பட்டணம், செஞ்சை, பர்மாகாலனி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த 57 சிலைகள் ஊர்வலமக எடுத்து வரப்பட்டு, டி.டி. நகர் முதல் வீதியிலிருந்து புறப்பட்டது.

செக்காலை ரோடு, கல்லுக்கட்டி, வ.உ.சி., ரோடு வழியாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பருப்பூரணியில் கரைக்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் பொருளாளர் சந்திரசேகர், விஸ்வநாதகோபாலன், நகர தலைவர் சந்திரன், மாவட்ட துணை தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

*சாக்கோட்டையில் நகரத்தார் மண்டபத்திலிருந்து பா.ஜ., ஒன்றிய தலைவர் சங்கர், சிதம்பரம் மற்றும் நென்மேனி தனபால் தலைமையிலான 27 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அக்னி பிள்ளையார் கோயில் ஊரணியில் கரைக்கப்பட்டது. டி.ஸ்.பி., கார்த்திகே
யன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இப்பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.,15ல் விநாயகர் ஊர்வலம் நடந்தது. சிங்கம்புணரி நகர், சுற்று வட்டார பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சீரணி அரங்கிற்கு எடுத்து வரப்பட்டன. அங்கு நடந்த விழாவிற்கு தடகள பயிற்சியாளர் சிங்கை மந்திரி தலைமை வகித்தார். சத்தியசீலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திருமாறன் முன்னிலை வகித்தனர். பாரதிய மஸ்தூர் சங்க அமைப்பாளர் தங்கராஜ், இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி பேசினர்.

இரவு 8:30 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சேவுகப் பெருமாள் கோயில் தெப்பத்தை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar