Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் போக்குவரத்து நெரிசல் ... திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில்சனிப்பிரதோஷம் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில்சனிப்பிரதோஷம் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

24 செப்
2018
12:09

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று (செப்.,23ல்) மாலை 4:30 மணி முதல் பிரதோஷ மூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ராமநாதீஸ்வரருக்கும், நந்தித் தேவருக்கும் சிறப்புதீபாராதனைகள் நடந்தது.

பின்னர் பிரதோஷமூர்த்தி சுவாமிகள், திருத்தல இசைக் குழுவினரின் இசையுடன் கோவிலின் உட்பிரகாரத்தை மூன்று முறைவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விக்கிரவாண்டி : தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (செப்., 22ல்) மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் நந்தீஸ்வரர் அருகம் புல், செவ்வரளி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலம்: ஆலகிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட எமதண்டீஸ்வரர் கோவிலில் நேற்று (செப்.,23ல்) சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தி லுள்ள திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இது போன்று மயிலம், பாதிராபுலியூர், செண்டூர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நடந்த சனி பிரதோஷ சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர்: வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம் சந்தனகாப்பு அலங்காரம் 5:30 மணிக்கு நந்திகேஸ் வரருக்கு மகா அபிஷேகம் அலங்காரம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர் நந்திகேஸ்வரருக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.

செஞ்சி: காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மாக தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர்.

பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச் சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் ஈஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம். அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷத்தை யொட்டி பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனைநடந்தது.

இதேபோன்று பாலமேடு, மஞ்சபுத்தூர், முக்கனூர், தியாகராசபுரம் சிவன் கோவில்களில் சனி பிரதோஷம் விமரிசையாக நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar