Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ... ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா: மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 27 திரவியங்களால் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2018
01:09

திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவின், 13ம் நாளான நேற்று, (செப்., 25ல்) உற்சவ விநாயகருக்கு, 27 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று, மலைக்கோட்டையில் எழுந்தருளி யுள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும், 150 கிலோ எடையில் பிரம் மாண்ட கொழுக்கட்டை படையல் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில், கடந்த, 13 தொடங்கி, உற்சவ விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.

13ம் நாளான நேற்று (செப்.,25ல்), மாணிக்க விநாயகர் கோவிலில், மூலவர், உற்சவருக்கு விபூதி, சந்தனம், திரவியப் பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லிப் பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், பன்னீர் மற்றும் பழ வகைகள் என, 27 வகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, (செப்., 26ல்) சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையுடன், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar