Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் கோயிலில் பூந்தட்டு ஊர்வலம் திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவிலில் நாளை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
11:02

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா ஜனவரி 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா 15 நாட்கள் நடக்கும். இம்மலையில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்துள்ளது. பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா நடப்பதுபோல, இங்கும் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 9 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. நாளை அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்குள் மகர லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 9ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், பத்தாம் தேதி இரவு தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 11ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. மகாதரிசனம் அன்று நடராஜபெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 12ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. தினமும் இரவில் பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் தனபாலன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar