Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஜனவரியில் ... சபரிமலைக்கு செல்ல மாட்டோம்: கங்காதரேஸ்வரர் கோவிலில் பெண்கள் சத்தியம் சபரிமலைக்கு செல்ல மாட்டோம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் அந்திம புஷ்கர விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் அந்திம புஷ்கர விழா

பதிவு செய்த நாள்

01 அக்
2018
11:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரியில், மகா புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்திம புஷ்கரம் விழா, 11ம் தேதி வரை நடக்கிறது. குரு பகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி, துலாம் ராசிக்கு உரிய, காவிரி நதியில், கடந்த ஆண்டு, செப்., 12 முதல், 24ம் தேதி வரை, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும், மகா புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில், தமிழக முதல்வர், சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தற்போது, குரு பகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு, திருநெல்வேலி குறுக்குத்துறையில், அக்., 10 முதல், 23 வரை, விருச்சிக ராசிக்கு உரிய நதியான, தாமிரபரணியில், புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், காவிரி மகா புஷ்கரம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், செப்., 30 முதல் அக்., 11ம் தேதி வரை, 12 நாட்கள், அந்திம புஷ்கர விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கான பிரதான பூஜைகள், அக்., 8ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. விழாவின் கடைசி நான்கு நாட்கள், வேதபாராயணம், ஹோமம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெற உள்ளன.விழா முன்னேற்பாடு கள் குறித்து, காவிரி புஷ்கர விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர், மகாலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.காவிரி புஷ்கர விழாவில் புனித நீராடியதன் பலனை, அந்திம புஷ்கர விழாவில் நீராடுவதன் மூலம் அடையலாம் என, காவிரி மகா புஷ்கர விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar