Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குன்றத்தில் வள்ளி மணவாளன் ... உத்தரகோசமங்கையில் பழமையான பொலிவிழந்த மூலிகை ஓவியங்கள் உத்தரகோசமங்கையில் பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் கோவில் பெயரில் அடாவடி வசூல்! பார்க்கிங் கட்டணத்திற்கு, டோக்கன்
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் கோவில் பெயரில் அடாவடி வசூல்! பார்க்கிங் கட்டணத்திற்கு, டோக்கன்

பதிவு செய்த நாள்

01 அக்
2018
12:10

உடுமலை: உடுமலை ஏழுமலையான் கோவில் பெயரில் முறைகேடாக, டோக்கன் அச்சடித்து பக்தர்களை மிரட்டி, தனியார் சிலர் வசூலில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில், உடுமலை வனப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் செல்ல, புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் வனத்துறை அனுமதியளிக்கிறது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு, வன எல்லையை ஒட்டிய பகுதியில், இடம் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்ந்த நிலையில், இந்தாண்டு, அடாவடி வசூல் துவங்கியுள்ளது.வனப்பகுதி அருகே, அரசு நிலங்கள் ஏராளமாக இருந்தும், பார்க்கிங் வசதி செய்யவில்லை. தனியார் நிலத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்என, 1 கி.மீ., முன்னரே போலீசார் வாகனங்களை தடுத்து, திருப்பி விட்டு மோசடிக்ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள் கு உதவிசெய்தனர். இருசக்கர வாகனத்துக்கு, 20 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்துக்கு, நுாறு ரூபாயும், வேன், சுற்றுலா வாகனங்களுக்கு, 150 ரூபாயும் என, ஒரே நாளில் பக்தர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

போலீஸ் உடந்தை: அதிலும், அறநிலையத்துறை வசம் உள்ள கோவில் பெயரிலேயே, முறைகேடாக டோக்கன் அச்சடித்து வழங்கியதோடு, கட்டணமும் குறிப்பிடவில்லை. அடாவடி வசூல் செய்ததால், அதிருப்தியடைந்த பக்தர்கள், போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் வேண்டியதை பெற்றுக் கொண்டதால் அவர்கள் இந்த புகார்களை கண்டு கொள்ளவேயில்லை.உடுமலை வனச்சரகர் தனபால் கூறுகையில், வனத்துறைக்கும், தனியார் வசூலுக்கும் சம்பந்தமில்லை. போலீசார் மூலம், அவர்கள் பார்க்கிங் ஏரியா அமைத்துள்ளனர், என்றார்.

செலவுக்கு தான்...: போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், கோவிலுக்கு அருகில் தனியார் நிலத்தை சமன் செய்து, பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. அவர்கள் செலவுக்கு வசூல் செய்தனர், என்றார். நடவடிக்கை எடுக்கப்படும்அறநிலையத்துறை ஆய்வர் புவனேஸ்வரி கூறுகையில், கோவில் சார்பில் தனியார் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. இந்தாண்டு கோவிலுக்கு நிலம் தராமல், அவர்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.கோவில் பெயரில் டோக்கன் அச்சடித்து வழங்குவது குற்றம். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, கோவில் பெயரில் முறைகேடாக வசூல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar