Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

02 அக்
2018
11:10

சபரிமலை, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதை தவிர்க்க வேண்டும், என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர், தேவசம்போர்டு உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களுக்காகநிலக்கல், தங்கும் இடங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் 10 ஆயிரம் பேர் தங்க வசதி செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை சாத்தியமில்லை. தரிசனம் முடிந்த பின் அவர்கள் தனிமைப்படும் நிலை ஏற்படும்.சபரிமலை செல்லும் அனைத்து பாதையிலும் பெண்களுக்கான வசதிகள் செய்யப்படும். பெண்களுக்காக கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க கட்டுப்பாடு விதிக்கப்படும். தரிசனம் முடிந்த பக்தர்கள் இரவில் அங்கு தங்காமல் உடனடியாக புறப்பட வேண்டும்.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் இதை பின்பற்ற வேண்டும்.கோயில் திறந்திருக்கும் நேரம், நாட்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். பக்தர்களுக்கு டிஜிட்டல் முன்பதிவு முறை செயல்படுத்தப்படும். பம்பையில் பெண்கள் குளிப்பதற்கு  வசதிகள் செய்யப்படும். நிலக்கல்- பம்பை பஸ்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார், துப்புரவு பணியில் பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar