Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி காலபைரவர் கோவிலில் ... நெட்டப்பாக்கம் ஏம்பலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசல் பைரவர் கோவிலில் சம்புகாஷ்டமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தலைவாசல் பைரவர் கோவிலில் சம்புகாஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 அக்
2018
12:10

தலைவாசல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. புரட்டாசி தேய்பிறை அஷ்டமி, சம்புகாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு அபி ?ஷகம் நடந்தது. ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, எட்டு பைரவர்களுக்கு, தனித்தனியாக பூஜை நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

* உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், சன்னவதி (98 வகை மூலிகை) வேள்வி உள்ளிட்ட பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி அம்மனுக்கு, கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மற்றும் சொர்ண பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஆயுள் விருத்தி, தாய் தந்தையருக்கு செய்த அபவாதங்கள் விலக வேண்டி, சம்புகாஷ்டமியில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar