Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் ... திருப்பூர் தாமிரபரணி மஹா புஷ்கரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி தசரா, புஷ்கர விழா எதிரொலி: விடுதிகள், ஹவுஸ் புல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
03:10

திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கரவிழா, குலசை தசரா விழாவையொட்டி நெல்லை, திருச் செந்தூரில் உள்ள விடுதிகள், ஹவுஸ் புல்லாகி வருகின்றன.திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டத்தில், தாமிரபரணி நதியின் மகாபுஷ்கர விழா வரும், 11ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழா, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். விழாவில் பாபநாசம் படித்துறையில் துவங்கி, புன்னகாயல் வரை உள்ள, 149 முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நீராடவும், வழிபாடு செய்யவும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருப்பினும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வேலைகள் எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் உறுதி செய்ய, காவல்துறை சார்பில் பாபநாசம், அருகன்குளம் படித்துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, ஆலோசனை செய்யப் பட்டன.விழா துவங்க இரு நாட்களே உள்ள நிலையில், வடமாநிலங்கள் மற்றும் வட மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக நெல்லை, பாளை, பாபநாசம், அம்பை போன்ற நகரங்களில் உள்ள விடுதிகள் ஆன்லைனில், புக் செய்யப்படுகின்றன.

வட மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மிக வாதிகள், மடாதிபதிகள், மதகுருக்கள் மற்றும் பக்தர் கள் புக்கிங் செய்துள்ளனர். இதனால், இங்குள்ள முக்கிய விடுதிகள், அனைத்தும் நிரம்பி விட்டன. இதை பயன்படுத்தி, விடுதி உரிமையாளர்கள் அதிக கட்டணமும் வசூலித்து வருகின்றனர்.

இதுபோல், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, நாளை (அக்.,10ல்) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.மைசூரு தசரா விழாவிற்கு, அடுத்த படியாக, 11 நாட்கள் நடக்கும் இத்தசரா விழாவில், பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி வேடங்கள் அணிந்து கலந்து கொள்கின்றனர். தசரா விழாவையொட்டி, குலசேரன் பட்டினத்தில் உள்ள விடுதிகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. தவிர, தனி தனி வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.தற்போதுள்ள வாடகையை விட, விடுதி, வீடுகளு க்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குலசை மட்டுமில்லாமல், அருகில் உள்ள உடன்குடி, நாசரேத், திருச்செந்தூரில் உள்ள விடுதிகளும் வேகமாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar