Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு ... கோபி கோவில்களில் குரு பெயர்ச்சி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப பக்தைகள் சத்திய பிரமாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
01:10

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 50 வயது வரை, செல்ல மாட்டோம் என, சென்னையில் இன்று, அய்யப்பன்பக்தைகள் சத்திய பிரமாணம் எடுக்கின்றனர்.கேரள மாநிலம், சபரிமலையில் உள்ளஅய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது, அய்யப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள்,அய்யப்பன் கோவில்நிர்வாகத்தினர், பக்தர்கள் என, பல தரப்பினரும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று, சென்னைவள்ளுவர் கோட்டத்தில், இந்து அமைப்புகள் சார்பில், இன்று மாலை, 3:00 மணிக்கு, போராட்டம் நடைபெறுகிறது.இது குறித்து, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர், ரவி கூறியதாவது:அய்யப்பன் குருசாமிகள், சென்னை அய்யப்பன் கோவில் நிர்வாகிகள், அனைத்து இந்து ஆன்மிக அமைப்புகள், துறவியர் சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.இதில், அய்யப்பன் கோவிலின் பாரம்பரியம், அதன் வழிபாட்டு முறை குறித்து, இந்து மத பெரியோர் பேச உள்ளனர். போராட்டத்தின் நிறைவில், ஆயிரக்கணக்கான பெண்கள், 50 வயதுக்கு முன், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாட்டோம் என, சத்திய பிரமாணம் எடுக்க உள்ளனர்.வரும், 17ம் தேதி, கேரளாவின் நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில், பெண்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar