Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரையூர் சபரிமலை பிரச்னையில் ஐயப்ப ... சூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம் சூரிய , சந்திர பிரபை வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
96 சதவீத சிலைகளை அறநிலையத்துறை பதியவில்லை ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2018
12:10

சோழவந்தான்: அறநிலையத்துறை கோயில்களில் 96 சதவீத ஐம்பொன் சிலைகளை பதிவு செய்யவில்லை, என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறினார். மதுரை மாவட்டம் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயின. அங்கு நேற்று (அக்., 16ல்) அவர் ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:கொள்ளை போன நான்கு ஐம்பொன் சிலைகளை 1992ல் அறநிலைய த்துறை பதிவு செய்துள்ளது. எனவே, இவை நூற்றாண்டு பழமையானவை. மற்ற கோயில் களில் உள்ள 96 சதவீத ஐம்பொன் சிலைகளை அறநிலையத்துறையினர் பதிவு செய்ய வில்லை. 2,700 கோடி ரூபாயில் முக்கிய இடங்களில் திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்கும்படி அறநிலையத்துறையிடம் ஓராண்டாக கூறி வருகிறோம்.2017க்கு பின் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மாட்டோம். எனவே குருவித்துறை சிலை திருட்டு வழக்கை சோழவந்தான் போலீசார் நடத்துவர், என்றார்.

ஐம்பொன் சிலைகள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த கணேசனுக்கு பொன்.மாணிக் கவேல் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படவுள்ளது.250 ரூபாய் பூட்டு போதாது!

குருவித்துறை கோயில் பாதுகாப்பு குறித்து செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:ஐம்பொன் சிலைகள் உள்ள அர்த்த மண்டபம் முன் பிரைட் பார் எனும் 32 இன்ச் அளவுள்ள இரும்பு ராடுகளை கொண்டு பாதுகாக்க வேண்டும். கதவுகளில் நான்கு இடத்தில் டிஸ்க் கிளாக்குகளால் பூட்ட வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பாதுகாக்க 250 ரூபாய் பூட்டு போதாது.தங்க நகைகளை பாதுகாக்க தரமான இரும்பு பெட்டிகள் தேவை. அவை கோயிலுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதிகாரி அறையில் வைக்கக்கூடாது. கோபுரத்தின் உச்சியில் அபாய ஒலி அமைப்பு கருவியை வைத்து, ஊருக்கே கேட்கும்படி செய்ய வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar