Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மேன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வெற்றி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அந்தஸ்து
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2018
15:16

சுயகவுரவத்தை பெரிதாக மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் அக்.23 வரையிலும், நவ.13க்கு பிறகும், செவ்வாய் அக்.27க்கு பிறகும் நன்மை தர காத்திருக்கின்றனர்.  சூரியன், சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும்.  சமுகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். அக்.27க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். அக்.23 ல் இருந்து நவ.13 வரை எதிலும் சற்று விட்டுக் கொடுத்து போகவும். அக்.22,23ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று  விலகி இருக்கவும். ஆனால் நவ.6,7,8ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ.11,12ல் சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

விருந்து, விழா என செல்வீர்கள்.அக். 27க்கு பிறகு வீடு, மனை வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியாளர்கள் சூரியன், புதனால் சிறப்பான நிலை பெறுவர். சிலர் விரும்பியபடி பதவி கிடைக்கப் பெறுவர்.  அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அக். 23ல் இருந்து நவ. 13 வரை அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை  மாத முற்பகுதியில் கேட்டு பெறவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு  கிடைக்க வாய்ப்புண்டு. நவ.4,5ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். அக்.27க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். குருவால் வீண் அலைச்சல் ஏற்படும்  வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது.  

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விரிவாக்கப் பணிக்காக விண்ணப்பித்த வங்கி கடன் கிடைக்கும். அரசு வகையில் இருந்த  தடைகள் அனைத்தும் மறையும். அக்.27க்கு பிறகு ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். அக்.18,19, நவ.9,10,18,19ல் சந்திரனால் தடைகள் வரலாம். அக்.27,28ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. கேதுவால் அவ்வப்போது பகைவர் தொல்லை குறுக்கிடலாம்.

கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விரும்பிய படி புகழ், பாராட்டு வந்து சேரும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகளுக்கு அக்.27க்கு பிறகு முன்னேற்றமான பலன் கிடைக்கும். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அக்.24,25,26ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். நண்பர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர். அக்.23 முதல் நவ.13 வரை பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. விவசாயிகளுக்கு பயறு, பழங்கள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அக். 27க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தினர் உதவிகரமாக இருப்பர்.

பெண்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தைக் காண்பர்.

அக்.29,30ல் விருந்து, விழா என செல்வீர்கள். அக்.20,21 நவ.16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக்.27க்கு பிறகு செவ்வாயால் சிலருக்கு புதியபதவி தேடி வரும். உடல்நிலை திருப்தியளிக்கும். நோயில் இருந்து குணம் அடைவீர்கள்.

* நல்ல நாள்: அக்.20,21,27,28,29,30, நவ.4,5,6,7,8,11,12,16
கவன நாள்: அக்.31, நவ.1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,9
* நிறம்: ஊதா, வெள்ளை

* பரிகாரம்:
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் நாகதேவதை வழிபாடு
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம்

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.