பழநி அருகே ஆயக்குடியில் பாழான பிரிட்டிஷ் ராணி நினைவுச் சின்னம்: பாதுகாக்க நடவடிக்கை தேவை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2018 02:10
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயில்கள், மலைகள், குகை ஓவியங்கள் போன்ற ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன.அந்த வரிசையில் பழநி அருகே ஆயக்குடியை ஆண்ட ஜமீன்தாரர் ஓபள கொண்டம நாயக்கர் பெருமையை கூறும் வகையில் இரண்டு அரண்மனைகள் ஊருக்குள் உள்ளன. அவரது பெயரில் ஓபளாபுரம் என்ற ஊர் உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓபளா கொண்டம நாயக்கர் காலத்தில் 1937ல் இந்தியாவை ஆண்ட 6வது ஜார்ஜ் மன்னர், எலிசபெத் ராணி ஆகியோர் முடிசூட்டு விழா நினைவாக, மே 12, 1937ல் ஆயக்குடி அரண்மனைக்கு செல்லும் வழி, கல்தூண் ஆர்ச் கட்டப்பட்டது. அதில் மன்னர், ராணியின் பெயர்கள் கல்வெட்டில் பொறித்துள்ளனர்.
பழநி - -திண்டுக்கல் மெயின்ரோடு ஆயக்குடி நுழைவுப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்சின்னம் பராமரிப்பு இல்லாமல் கல்தூண்கள் உடைந்து போனதால் பாகங்கள் ரோட்டோரம் மண்ணில் புதைந்து கிடக்கிறது. வரலாறைதெரிந்துகொள்ளும் வகையில் கல்தூணைமீண்டும்வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.பழநி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், ஆயக்குடியில் ஓபளா கொண்டம நாயக்கர் காலத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் மன்னர், ராணியின் நினைவாக எழுப்பட்ட கல்தூணை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.