Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நுாதன திருவிழா: சாட்டையடி வாங்கி ... பழநியில் ஷீரடி சாய்பாபா ஸித்தி தினவிழா பழநியில் ஷீரடி சாய்பாபா ஸித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் நவராத்திரி அம்பு எய்யும் விழா புலி வேடமிட்டு ஊர்வலமாக வந்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகரில் நவராத்திரி அம்பு எய்யும் விழா புலி வேடமிட்டு ஊர்வலமாக வந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

20 அக்
2018
03:10

விருதுநகர்: விருதுநகரில் நவராத்திரி விழாவையொட்டி சுவாமிகள் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நவராத்திரி விழாவைதொடர்ந்து விஜயதசமியான நேற்று (அக்., 19ல்) விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி, மதுரை ரோடு தேவஸ்போர்டு நந்தவனத்தில் சொக்கநாதர், சந்திர சேகரராக அவதாரமெடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக காலை 8:00 மணிக்கு தங்க முலாம் பூசிய தேரில் சொக்கநாதர் சந்திரசேகரராக எழுந்தருள ஊர்வலமாக வந்து மதுரை ரோடு நந்தவனத்தை அடைந்தார்.அங்கு 9:30 மணிக்கு சுவாமி அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும்  நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்தந்த பகுதி கோயிலிருந்து புலிவேடமணிந்த பக்தர்கள் முன் செல்ல சிலம்பம், களரி போன்ற வீர
விளையாட்டுகளுடன் மக்கள் ஊர்வலமாக வந்து நந்தவனத்தில் சுவாமியை வழிபட்டனர்.

இது போல் மாலையில் விருதுநகர் வெயிலுகந்தம்மன் சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து கே.வி. எஸ். பள்ளி அருகே தேவஸ் போர்டு நந்தவனத்தில் ஒன்றுகூட அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு பக்தர்களுக்கு சுவாமிகள், அம்மன் அருள் பாலித்தனர்.

இதை தொடர்ந்து இரவு 8:00 சுவாமிகள் கோயில்களுக்கு திரும்பினர்.இதையொட்டியும் புலி வேடமணிந்தவர்களுடன் பக்தர்கள் வலம் பக்தர்கள் ஊர் வலமாக வந்து வழிபட்டனர்.
இதன் பின் பக்தர்கள் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் ஒன்று திரண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar