அழகன்குளம்:அழகன்குளம் முத்துராஜா நகர் பகுதியில் உள்ள கூனியம்மன், செல்வகணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. அழகன்குளம் முத்துராஜாநகர், செட்டிபனை பகுதியில் உள்ள கூனியம்மன், செல்வகணபதி கோயில் கும்பாபிேஷகம் அக்.,18 ல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை மருந்து சாத்துதல் நடந்தது. அக்.,19 காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் மகாகும்பாபிேஷகம் நடந்தது. இதில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுவாமி கூனியம்மன், செல்வகணபதிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்தரையர் உறவின்முறை, கிராம மக்கள் செய்திருந்தனர்.