Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி ... செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விசேஷ நாட்களில் கோவிலுக்கு சிறப்பு பஸ்: பக்தர்கள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விசேஷ நாட்களில் கோவிலுக்கு சிறப்பு பஸ்: பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

23 அக்
2018
11:10

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசுவாமி கோவிலுக்கு, விசேஷ நாட்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில், சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசுவாமி கோவில் உள்ளது. மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த இந்தக்கோவிலை பொதுமக்கள் குழு அமைத்து புதுப்பித்தனர்.கடந்த 2013 ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோழஅரசி நினைவாக உருவான இந்த கிராமம் சோழ(ன்)மாதேவி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி, சோழமாதேவி என அமைந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன.ஆயிரம் ஆண்டுகளுக்கு, முன்கட்டப்பட்ட கோவில் சுற்று மதில் மற்றும் உட்புறச்சுவர்களில் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.சிவராத்திரி, பிர தோஷம், சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில், கோவிலுக்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அந்நாட்களில், கோவிலுக்கு சிறப்புபஸ் அல்லது வழக்கமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை கோவில் வளாகம் வரை சென்று திரும்புவதாக, இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

இது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒருகி.மீ.,க்கு அதிக தொலைவில் உள்ளதால், பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் சென்று திரும்புவது மிகவும் சிரமமாக உள்ளது.இதனால் விசேஷ நாட்களில் கோவில் வரை சென்று திரும்பும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar