Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் பக்தர்களுக்கு தங்கும் ... சபரிமலைக்கு நேற்றும் (அக்.,22ல்) 5 பெண்கள் பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர் சபரிமலைக்கு நேற்றும் (அக்.,22ல்) 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் சிந்தினார் ஐ.ஜி.,
எழுத்தின் அளவு:
ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் சிந்தினார் ஐ.ஜி.,

பதிவு செய்த நாள்

23 அக்
2018
12:10

சபரிமலை:சபரிமலை சன்னிதானத்துக்கு மாடலிங் அழகி ரஹானா பாத்திமாவை பாது காப்பாக அழைத்து சென்ற ஐ.ஜி., ஸ்ரீஜித் நேற்று (அக்.,22ல்) கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது ஐயப்பனை பார்த்து மனமுருகி கண்ணீர் சிந்தினார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும், பக்தர்களின் வேண்டு கோளை மதிக்காமல் அதை நடைமுறைப்படுத்துவதில் கம்யூ., அரசு காட்டிய வேகமும் ஐப்பசி மாத பூஜையை அலங்கோலப்படுத்தியது.

நடைதிறந்தது முதல் நேற்று வரை விளம்பரம் தேடி பெண்கள் சிலர் வருகை, பக்தர்கள் எதிர்ப்பு, நிலக்கல்லில் கல்வீச்சு, கைது என சம்பவங்கள் அரங்கேறின.

சபரிமலையில் இதுவரை லத்தி இல்லால் பணிபுரிந்த போலீசார், இந்த முறை கையில் வைத்துக் கொண்டு வலம் வந்தனர்.கோயிலுக்கு வந்த மாடலிங் அழகி ரஹானா பாத்திமாவை 180 போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவரை அழைத்து சென்ற போலீசாருக்கு தலைமை வகித்தவர் ஐ.ஜி., ஸ்ரீஜித். பக்தர்களின் எதிர்ப்பை யும் மீறி சன்னிதானம் நடைப்பந்தல் வரை அழைத்து சென்றார்.

"இதை கண்டித்து கோயில் நடையை அடைப்பேன், என தந்திரி கண்டரரு ராஜீவரரு எச்சரித் ததால் ரஹானா பாத்திமாவை போலீசார் திரும்ப அழைத்துச் சென்றனர்.

கண்ணீர் வடித்த ஐ.ஜி.,இந்நிலையில் ஐ.ஜி., ஸ்ரீஜித் நேற்று 22 ல்சன்னி தானம் வந்தார். இறுக்கமான முகத்துடன் சன்னிதானத்தின் முன்புறம் வந்து கூப்பிய கைகளுடன் ஐயப்பன் முன் நின்றார். அப்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. கடந்த ஆறு நாட்களாக நடை திறந்திருந்தும் நேற்று 22 ல் தான் அவர் தரிசனத்துக்காக வந்தார். ஐயப்பனுக்கு சவால் விடுவோர் இறுதியில் சரணாகதி அடைய வேண்டியதுதான் என அங்கிருந்த பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar