Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் பொம்மைகள் தயாரிப்பு தீவிரம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் புதிய தீர்த்தங்கள் பிரதிஷ்டை: பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில் புதிய தீர்த்தங்கள் பிரதிஷ்டை: பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

29 அக்
2018
11:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று 5 புதிய தீர்த்தக்கிணறுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் புனித நீராடினர்.ராமநாத சுவாமி கோயிலில் பழைய தீர்த்தக்கிணறுகளுக்கு பதிலாக புதிய தீர்த்தக்கிணறுகள் ஏற்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், 2 முதல் 6 வரை தீர்த்தக் கிணறுகளை கோயில் நிர்வாகம் மூடியது. பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி, கோயிலின் 2ம் பிரகாரத்தில் 6 தீர்த்தக்கிணறுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.முதல் தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்ய நேற்று காலை 5 புனித தீர்த்தகலசங்களை கோயில் குருக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து காலை 9:30 மணிக்கு, புதிய தீர்த்தக்கிணற்றில்புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் மங்கையற்கரசி,மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிய இடத்தில் தண்ணீர் இறைக்க உத்தரவு கடிதம் கொடுத்தால்தான், பக்தர்களுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம், என யாத்திரை பணியாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.கோயில் அதிகாரிகளின் சமரச பேச்சில் தீர்வு ஏற்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக தண்ணீர் இறைத்து ஊற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar