Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவந் நாம மஹிமை மஹா வியாதிகள் நீங்குவதற்கு
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
க்லேசங்கள் போவதற்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
02:10

‘சிவாய நம: சிவாய நம: ’ என்று 5 நிமிஷம் அக்ஷரங்களை மனதில் வைத்து ஜபித்த பின் ‘நாராயண என்னும் குருவாயூரப்பனின் திவ்ய மங்களமான நாமாவை 3 மணி நேரத்துக்கு குறையாமல் ஜபித்து விட்டு பூஜ்ய ஆதிசங்கர பகவத் பாதாள் அனுக்ரஹித்த ‘ஹனுமத் பஞ்ச ரத்னத்தை ’ 108 தடவை பாராயணம் செய்வது மூலம் நிச்சயம் எல்லா க்லேசங்களும் நீங்குவது மட்டுமின்றி ஆனந்தமும் உண்டாகும்.

ஆர்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து

(விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பலச்ருதி கடைசீ ச்லோகம்)

தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜம் அத்ராக்ஷம்
(ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னத்தில் உள்ள ச்லோகம்)

வஸ்த்ரதாரணம் சாஸ்த்ரத்தில் சொல்லியபடி இருந்தால் சீக்கிரத்தில் பயன் ஏற்படும்.

கிடைத்தற்கரிய மானிட ஜன்மாவை பகவான் நமக்குக் கொடுத்தது மீண்டும் ஜன்மம் ஏற்படாமல் செய்து கொள்ளத்தான். நாம் இந்தப் பிறவியில் உள்ள க்லேசம் காரணமாக இதையே நினைத்து வருந்துவதால் ‘கடைசி நேரத்தில் எந்த விஷயம் மனதில் உள்ளதோ அது தான் மறு ஜன்மத்தில் அமையும் ’ என்கிற கீதை வசனப்படி நமக்கு அந்தப்பிறவி மீண்டும் வந்து விடும். ஆகையால் முன்கூறிய படி செய்து வந்தால் இப்பிறவியில் உள்ள க்லேசம் முழுமையும் நிவ்ருத்தியாகாவிடினும் (வினை கடுமையாக இருந்தால்) பகவத் க்ருபையால் ஏளனம் ஸமூகத்தில் ஏற்படாமல் இருக்கும்.

மேற்படி விஷயம் எழுதியதற்கு பிரமாண வாக்யம் ஸ்ரீமந் நாராயணீயத்தில் 3ம் தசகம் 3ம் சுலோகம், குருவாயூரப்பா, உன் க்ருபை ஏற்பட்டால் எது தான் மனித வர்க்கதிற்கு கைவராது. என ஒருவனின் குறையை போக்குவதில் உமக்கு என்ன சிரமம். 3ம் தசகம் 10ம் சுலோகம். அப்பேர்ப்பட்ட பகவானின் க்ருபை ஏற்படும் வரை மனோ, வாக், காயங்களால் (மனம், சொல், செயல்) நாம் வழிபாடு செய்ய வேண்டும். நாள் போய்க் கொண்டே இருக்கிறதே, ஸமூகத்தில் உள்ள நமக்கு சில காரியங்கள் ஆக வேண்டுமே என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அவரே பதில் தருகிறார். உன் பக்தியைக் கடல் போல் எனக்குக் கொடுப்பாயானால் அந்த அபார பக்தியே எல்லாத் துன்பங்களையும் போக்கி விடும். இதில் வியாஸர், நாரதர் போன்ற மஹான்களுடைய வாக்கும் பகவத் கீதையில் பகவானுடைய வாக்கும் பிரமாணம்.

தற்காலத்தில் பொதுவாக ஜனங்கள் தங்கள் கஷ்ட நிவ்ருத்திக்காகவும் தங்கள் இஷ்டம் கூடுவதற்காகவும் ஏதேனும் நல்ல காரியம் செய்ய ஆசைப்பட்டு சில பேர்களை நாடும் போது அவர்கள் தன்னலம் காரணமாக அதிக பணச்செலவு உள்ளதாயும் கஷ்டப்பட்டு செய்யக்கூடியதாயும் செய்யச் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீமத் பாகவதப்படி பகவானுடைய நாம ஜபத்தால் எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். எல்லா இஷ்டங்களும் கைகூடும். அதோடு மட்டும் இல்லாமல் பகவத் பாதாள் அனுக்ரஹித்த வழிப்படி 6 தெய்வங்களில் எந்த தெய்வம் தன் இஷ்ட தெய்வமோ அந்தத் தெய்வத்தின் திரு நாமத்தை 1 மணி ஜபம் செய்து விட்டுப் பிறகு எப்போதும் எங்கும் சொல்லி வந்தால் அவரவர்களின் கஷ்டமும் நீங்கி இஷ்டமும் கைகூடி உலகியலில் உள்ள பற்றும் விலகி அருளியலில் பற்று ஏற்படுவதால் மனம் நிம்மதி அடையும்.

1. கணபதி

ஜய கணேச ஜய கணேச ஜயகணேச பாஹிமாம்
ஜய கணேச ஜய கணேச ஜயகணேச ரக்ஷமாம்

2. முருகன்

ஜயானந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயமோக கீர்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்தஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம்ஸதா முத்திதான ஈசஸூனோ

3. சிவன்

சிவாய நம:

4. சூரியன்

‘நமாமி சிவம் அவ்யயம் ’

5. அம்பாள்

ஜய ஜய ஜகதம்ப சிவே

6. நாராயணன்

‘ராம ’ ‘ராம ’ ‘ராம ’

‘கோவிந்த தாமோதர மாதவ ’

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் முறைப்படி நடத்த இயலாத போது 7 நாள் காலை முதல் மாலை வரை அகண்டமாக ஜபிக்க முறை வைத்துக் கொள்ளலாம்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

என்ற நாம ஜபம் செய்வது மிகவும் சிரேஷ்டம், ஏனெனில் கலி ஸந்தரண உபநிஷத்தில் மேற்படியுள்ள நாமத்தை 3 -1/2 கோடி ஜபிப்பவன் ஜீவன் முக்தனாக ஆவான் என்று சொல்லியுள்ளது.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar