Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக ... சுருட்டப்பள்ளி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சேறையில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2012
11:02

கும்பகோணம்: திருச்சேறை சாரநாதபெருமாள் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறையில் சாரநாயகி உடனாய சாரநாதபெருமாள் கோவில் உள்ளது. கிரகயுகத்தில் பிரம்மாவாலும், திரேதா யுகத்தில் முனிவர்களாலும், துவாபர யுகத்தில் கருடனாலும் கலியுகத்தில் காவிரித்தாயாராலும் பூஜிக்கப்பட்டவரும், சங்கம், கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதங்களுடன் மூலவராகவும், பின்பு பஞ்சலெட்சுமிகளுடன் வைகுண்டத்தில் இருக்கும்படியாக காவிரித்தாயாருக்கு சேவை சாதித்து இத்தலத்தில் வணங்கும் அனைவருக்கும் எல்லா செல்வங்கள் கிடைப்பதாக ஐதீகம். சிறப்புமிக்க இக்கோவிலில் தைப்பூச தேரோட்டம் விமரிசையாக நடப்பது வழக்கம். வைணவத்தலங்களில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் ஒரே தலமாக போற்றப்படுகிறது. இவ்வாண்டும் கடந்த மாதம் 30ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச பெருவிழா தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. ஒன்பதாம் திருநாளில் காலை 4 மணிக்கு மூலவருக்கு தங்கமுலாம் அங்கி சேவை நடந்தது. தொடர்ந்து காலை 5 மணிக்கு பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தேருக்கு எழுந்தருளினார். அதன்பின் காலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார் பங்கேற்று தேரின் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி, பஞ்., தலைவர் வெண்ணிலா, ஒன்றியகவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாரநாதா, சாரநாதா என்று கோஷம் எழுப்பியவாறு தேர் வடம்பிடித்து தேர் இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி ... மேலும்
 
temple news
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar