பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி விழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2018 12:11
செஞ்சி:பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று (நவம்., 8ல்) துவங்கிது. மேல்மலையனூர் அருகே உள்ள பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோடீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி கந்த சஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்) துவங்கியது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், காலை 8 மணிக்கு கலச பிரதிஷ்டையும், யாகசாலை பூஜையும், நவவீரர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடர்ந்து காலை 10 மணிக்கு நவவீரர்கள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 12ம் தேதி வரை நவ வீரர்கள் வீதி உலா நடக்க உள்ளது. வரும் 13ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசமஹார நிகழ்ச்சியும், 14ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது.