Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருவளூர் கோட்டீஸ்வரர் ... பரமக்குடியில் கவுரி நோன்பு விழா பரமக்குடியில் கவுரி நோன்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா

பதிவு செய்த நாள்

09 நவ
2018
01:11

தேனி:தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவம்., 8ல்) துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேனி பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கி கந்த சஷ்டி கவசம் பாடினார்.

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தக்கார் அண்ணாதுரை தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனுக்கு கலச சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை நடந்தது.  சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.  இன்று முதல் நவ.14 வரைதினமும் சுவாமிக்கு  சிறப்பு பூஜை நடக்கிறது.
 
* போடி பரமசிவன் கோயிலில் உள்ள முருகன், அக்ரஹார விநாயகர் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தன.

கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 21 வது ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு பால் அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீகக்கூட்டு வழிபாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

அபிேஷகப்பால், மாவு மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து
பாதயாத்திரை குழுவினர் பஜனைப் பாடல்கள்         பாடினர்.

* ஆண்டிபட்டி:சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் முருக பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர்.டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி கந்த சஷ்டி விழாவை துவக்கினர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், வடக்கு தெரு காரமடை விநாயகர் கோயில்களில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.  நவ.13ல்  சுவாமிக்கு பருப்பு நீர் படையல் செய்து பக்தர்கள் விரதத்தை முடித்து, நவ.14ல்  அன்னதானத்தில்  பங்கேற்பர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar