Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் குண்டுகரை சுவாமிநாத ... இந்து முன்னணி யாத்திரை கோவையில் இன்று (நவம்., 13ல்) துவக்கம் இந்து முன்னணி யாத்திரை கோவையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?

பதிவு செய்த நாள்

13 நவ
2018
12:11

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பகுதிகளில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த வரலாற்றுச்சான்றுகள், கோவில்கள் ஏராளமாக உள்ளன.

கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், தாத்தேத்ராயர், தாண்டேஸ்வரசுவாமி கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், அர்ச்சனேஸ்வரர் கோவில் என, 50க்கும் மேற்பட்ட ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான கோவில்கள் உள்ளன.அதே போல், அறநிலையத்துறை பட்டியல் இனத்தில் சேராத சிறிய கோவில்கள், 208 உள்ளன.

இதிலும், பெரும்பாலான கோவில்கள், பல நூற்றாண்டு பழமையானவையாக உள்ளன.மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், கோவில்களே நிர்வாக மையமாக இருந்தன. அக்கோவில்களில், நித்ய பூஜைகள், விழாக்கள் சிறப்பாக நடக்கவும், அர்ச்சகர், பணியாளர்கள் தடையில்லாமல், கோவில் பணி மேற்கொள்ளும் வகையில், மானிய நிலங்களும் ஒதுக்கப்பட்டன.

இவ்வாறு, ஒவ்வொரு கோவிலுக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கோவில் நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்புகளாகவும், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில் நிலங்களை கண்டறிந்து, அவற்றை மீட்கவும், கோவில் நிலங்கள் விற்பனையை தடுக்கும் வகையில், பதிவுத்துறை அலுவலத்தில், சர்வே எண் வாரிய தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பழமையான கோவில்கள் ஏராளமாக இருந்தும், கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் மாயமாகியுள்ளன. இதனால், பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகிறது.

அரசு உத்தரவோடு, உயர் நீதிமன்ற உத்தரவுகளும் கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க உத்தரவிட்டும், உடுமலை பகுதியிலுள்ள கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் கூட தயார் செய்யப்படாமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்களின் நிலை தெரியாமல் உள்ளது.

எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் பழைய கிராம ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிய வேண்டும். பாரபட்சமற்ற முறையில், அந்நிலங்களை மீட்க வேண்டும்.விரைவில் மீட்கும் பணி!அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மீட்கும் பணி துவங்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar