Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ... சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் சோலைமலை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 நவ
2018
12:11

உடுமலை:உடுமலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாய் நடந்தது.உடுமலையில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம்தேதி துவங்கியது.

பக்தர்கள், சஷ்டி விரதத்தையும் துவக்கினர். கோவில்களில், நாள்தோறும், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மயூர வாகனம், ரிஷபம், மயில், யானை, சின்னமயில் வாகனங்களில் திருவீதி உலா நடந்தது.முளைப்பாரி எடுத்தல் கோவில்களில் நடந்தது.

விழா நிறைவாக, சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி, உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவில், பாப்பான்குளத்தில், ஞானதண்டாயுதபாணி கோவிலில் நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிகளுக்கு, வள்ளி தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது.

பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முத்தைய பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், காலை, 10:30 மணி முதல் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.பக்தர்கள் முருகனை துதித்து, கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம் படித்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு, பட்டு ஆடை உடுத்தி, திருமண அலங்காரம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா, கோஷத்துடன் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை யை மணமுடித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar